அமலா மீது கடுப்பாகும் சமீரா..

‘வேட்டை’ படத்தில் அமலாவும் சமீராவும் அக்கா தங்கையாக நடித்தனர். படப்பிடிப்புகளிலும், தொலைக்காட்சி பேட்டிகளிலும் நிஜமாகவே அக்கா தங்கையாகவே நடந்து கொண்டனர். ஆனால் சமீபகாலமாக அமலாவின் மீது கடுகடுப்பாகவே இருக்கிறார் சமீரா.

‘வேட்டை’ படத்தின் இயக்குனர் லிங்குசாமி கதை சொல்லச் சென்றபோது, “அமலா- ஆர்யா ஜோடி. நீங்க மாதவன் ஜோடி. ரெண்டு பேருக்கும் நடிப்புக்கும், இளமைக்கும் ஈக்குவலான ரோல்” என சொல்லியிருக்கிறார்.

சரி நமக்கு மாதவன் ஜோடியாக நடிக்கிறார். அதனால் அமலாவுக்கு அக்காவாக நடித்தாலும் இமேஜ் அடிபடாது என்ற நினைப்பில் சரி சொல்லிவிட்டார். லிங்குவும் சொன்ன மாதிரியே சமீராவுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒரு கேரெக்டரை தந்து தப்பிவிட்டார். படமும் ஹிட்.

ஆனால் அவ்வளவு பெரிய ஹிட் படத்தில் நடித்தும் தனக்கு பெரிய படங்களே வரவில்லையே ஏன் என நொந்துபோன சமீராவுக்கு கடைசியாக பிறந்த தெளிவுதான் அமலாவின் மீது கோபம் வரக் காரணம் என சமீராவுக்கு நெருங்கியவர்கள் பத்தி வைக்கின்றனர்.

அதாவது ஏற்கனவே கொஞ்சம் அக்கா தோற்றத்துடன் இருக்கும் சமீராவுக்கு வேட்டை படத்தில் அமலாவின் அக்கா பாத்திரத்தில் பக்காவாக பொருந்திப் போனது மிகப் பெரிய மைனசில் கொண்டு கொண்டு போய்விட்டுவிட்டது. எந்த ஹீரோவிடம் சமீராவின் பெயரைச் சொன்னாலும் ஐயோ அக்கா மாதிரி இருக்குமே என்று கடுப்படித்து விடுகிறார்களாம். இதற்கெல்லாம் அம்மணி தன்னை பேட்டிகளிலும் அக்கா அக்கா என்று அழைத்ததே காரணம் என்று நினைக்கும் சமீரா தற்போதெல்லாம் தங்கையிடமிருந்து போன் வந்தாலே எல்லாம் இவளால் தான்.. இதில் போன் வேறா என எரிகிறாராம்.

sameera reddy and amalapaul worked together in vettai. lingusamy directed the movie. amalapaul always mentioned sameeraa as her elder sister in the interviews.Amala’s words are making problems to sameera’s carrier. so some misunderstanding going on in between them.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *