‘அறம்’ சுனுலெட்சுமி யாரை மணக்கிறார் தெரியுமா? எக்ஸ்க்ளூஸிவ் அப்டேட்!!

அறம் படத்தில் உங்களுக்கு பிடித்த  நடிப்பு யாரோடதுன்னு பட்டிமன்றம் வைக்குமளவிற்கு  நயனோடு போட்டி போட்டு  நடித்திருப்பார் சுனு லெட்சுமி..

சிரித்தால் ரசிப்பேன், செங்காத்து பூமியிலே, எப்போதும் வென்றாள், டூரிங் டாக்கீஸ், அறம், சாவி இவைதான் இவரது தலபுராணம். 

தற்போது மணிமாறன் இயக்கத்தில், வெற்றிமாறன் தயாரிப்பில் சங்கத்தலைவனில்  நடித்து வருகிறார்.  

இவருக்கும் மதயானைக் கூட்டம், கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா ஆகிய படங்களில் நடித்த கதிருக்கும் எங்கே எப்போது காதல் பற்றிக்கொண்டதோ தெரியவில்லை…

தற்போது அது திருமணத்தில் வந்து நிற்கிறது. ஆம். கதிருக்கும் சுனு லெட்சுமிக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் ரகசியமாக செய்து வருகின்றனர். 

 கதிர் நடிப்பில்  சிகை, சத்ரு, பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.

இதற்கு  நடுவில் கதிர் – சுனு லெட்சுமி திருமணம் மார்ச்  நான்காம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல் கசிகிறது..

Leave a Reply

Your email address will not be published.