ஆராயிக்கு நேர்ந்த கொடூரம் யார் கண்ணுக்கும் தெரியலையா? நடிகர் பிரசன்னா காட்டம்!

தமிழ் மீது ஆழ்ந்த அக்கறையும் நல்ல எழுதும் திறமையும் கொண்டவர் நடிகர் பிரசன்னா. ஒரு சில நடிகர்களைப் போல தமிழை தப்பு தப்பாக எழுதாமல் தெளிவாகவே சொல்ல வந்த கருத்தை பொட்டில் அடித்தாற்போல சொல்லிவிடுவார்.

சமூக அக்கறையுள்ள நடிகரும்கூட… நிறைய ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை, புத்தகங்கள் என சத்தமில்லாமல் உதவி வருகிறார்கள் இவரும், இவர் துணைவியார் நடிகை சினேகாவும்.

தற்போது அனைத்து நடிகர் நடிகைகளும் சிரியாவில் நடக்கும் போர் பற்றி தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் தமிழ் நாட்டில் நடந்திருக்கும் ஒரு கொடுமையான நிகழ்வைப் பற்றி யாரும் பேசாதது குறித்து தனக்கேயாயான பாணியில் விளாசியிருக்கிறார் நடிகர் பிரசன்னா..

விழுப்புரத்தில் ஆராயிக்கு நேர்ந்த கொடூரம், ஒரு பிரபலத்தின் மறைவால் அதிகம் பேசப்படவில்லையா? அல்லது வேறு காரணமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கேரளாவில் மதுவை கொன்ற கும்பலை கைது செய்தது போல் இங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? மதுக்களும், ஆராயிகளும், பிள்ளை கொலைகளும்,

பாலியல் வன்புணர்வும் நாள்தோறும் நடக்கும் நம் முற்றத்தை சீர் செய்யாமல், சிரியாவின் படுகொலைகளை எண்ணி உச்சுக்கொட்டி என்ன பயன்? மனிதம் மரித்ததெப்போது? என்றும் நடிகர் பிரசன்னா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதோடு அந்த குடும்பத்துக்கு நேர்ந்த சோகச் சம்பவத்துக்கு நடிகர் பிரசன்னா கண்டனம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வெளம்புதூர் கிராமத்தில் தலித் பிரிவைச் சேர்ந்த விதவை தாய் ஆராயி தனது 14 வயது மகள் மற்றும் 8வயது மகளுடன் வசித்து வந்துள்ளார்.

நிலத்தகராறு காரணமாக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆராயியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கி, 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, சிறுவனை கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை தனக்கு ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வெல்டன் பிரசன்னா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *