உலகத்தில் உள்ள எல்லா டான்ஸர்களுக்கும் மியாவை காணிக்கையாக்கும் இனியா!

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள பட உலகிலும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை. மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல் இயல்பாக பழகக் கூடியவர் இனியா.

நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்தை அதிக அளவில் நேசிக்கக் கூடியவர்.

அதனால் மியா என்ற நடனப் பெண் ஒருவரின் வாழ்க்கைப் பதிவை 8 நிமிட வீடியோ ஆல்பமாக “மியா” என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்.

மியா துடிப்புள்ள ஒரு பெண். பிரபல டான்ஸராகி கொடி கட்டிப் பறக்க வேண்டும் ..விருதுகளை வாங்கி குவிக்க வேண்டும்.

இது தான் அந்தப் பெண்ணின் வாழ்க்கை லட்சியம். அந்த லட்சியத்தை அடைய போராடுகிறாள்.. எவ்வளவோ தடைக்கற்கள்…

ஆனால் லட்சியத்தை அடைய வேண்டுமென்றால் முயற்சியை கை விடக் கூடாது என்று போராடுகிறாள்..

அந்த முயற்சி எப்படி வெற்றியாகிறது..இது தான் மியாவின் பதிவு

“ வானத்தில் பறக்க

சிறகுகள் கிடைக்குமா ” என்று தொடங்கும் இந்த இசை ஆல்பத்தில் வசனங்களும் இருக்கும்.

வழக்கமான இசை ஆல்பம் மாதிரி இல்லாமல் ஹைடெக் சினிமா நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது..

அமயா எண்டர்டைமெண்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக இனியா தயாரித்து மியா என்ற கதாபாத்திரமேற்றிருக்கிறார்.

இது பற்றி இனியா கூறும்போது..

இந்த மியா வீடியோ ஆல்பம் எனது முதல் முயற்சி..

இதற்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த வீடியோ ஆல்பத்தை பார்த்து பாராட்டிய நவீன்பிரபாகர் ,
ரியாஸ், கபாலிபாபு மூவரும் பியாண்ட்பிரேம்ஸ் நிறுவனம் மூலம் இந்த வீடியோ ஆல்பத்தை பிரமாதமாக வெளியிடுகிறார்கள்.

இந்த ஆல்பத்தின் மூலம் வசூலாகும் பணத்தில் கேன்சரால் பாதித்த 10 பேருக்கு மருத்துவ உதவி செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்.

இது போல இன்னும் நிறைய திட்டமிட்டுள்ளோம்.

இந்த உலகத்தில் உள்ள எல்லா டான்ஸர்களுக்கும் மியாவை காணிக்கையாக்குகிறேன் என்றார் இனியா.

ஒளிப்பதிவு : அபி ரெஜி. லாவல்

எடிட்டிங் : அருள் தாஸ்

இசை : அஸ்வின் ஜான்சன்

பாடல் : கோவிந்தன் பழனிசாமி

கான்சப்ட் நடனம் : அருண் நந்தகுமார்..

இயக்கம் : S.மகேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *