என்னாச்சு மகத் – மஞ்சு மேட்டர்?

கடந்த சனிக்கிழமை இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் தெலுங்கு, தமிழ், நடிகர்-நடிகைகள் பங்கேற்றனர். மது வகைகளும் பரிமாறப்பட்டது. அப்போது டாப்சி விவகாரம் தொடர்பாக மகத், மனோஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

டாப்சியுடன் பேசாதே என ஒருவரையொருவர் எச்சரித்தனர். ஆவேசமாக திட்டவும் செய்தனர். ஒரு கட்டத்தில் மோதல் முற்றியது. மகத் சட்டையை பிடித்து இழுத்து மனோஜ் அடித்து உதைத்தார். பதிலுக்கு மகத்தும் தாக்கினார். பரபரப்பாக ஓடிய மஞ்சு, மனோஜ் மோதல் அதன்பின்னான சகலமும் சப்பென்றாகிவிட்டது..

மகத் கொடுத்த கேஸை வாபஸ் வாங்கிவிட்டதாகவும், மஞ்சு மகத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் அடிபடுகின்றன. இந்த விவகாரம் விரைவில் முடிவடைந்ததற்கு மிக முக்கிய காரணம் ஒரு பெருந்தலை என்கிறார்கள். மிக முக்கிய நடிகர் ஒருவர் தலையிட்டதாலாம். எல்லாம் நட்பு, நண்பனுக்காக என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.