எல்லா திருமணத்தையும் கலர்ஃபுல்லாக சுடும் இயக்குநர் நலன்!

திருமணம் சொந்த பந்தங்களை ஒரு குடும்பமாக ஒன்றிணைக்கும்…. மகிழ்வோடு கூடும் ஒரு நிகழ்வு…

இந்த கலாட்டா கூட்டத்தோடு சிரிப்பும் கும்மாளமும் கலந்தால்?? பார்க்க பர பர விறு விறு தொடர் கிடைக்குமே.. !!

அதேதான்! அதைத்தான் கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி.

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களின் இயக்குநர் நலன் குமாரசாமிதான் அடுத்து ”கல்யாணமும் கடந்து போகும்” என்ற வலைத்தொடரில் இறங்கியிருக்கிறார்.

திருமணம் என்ற நிகழ்வை எல்லா மொழியினரும் எல்லை தாண்டி ரசிக்கிறார்கள்.

நாடுகள், அவர்களின் கலாச்சாரம் தாண்டி மற்றவர்களின் திருமண முறை எப்படி உள்ளது என தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

மிகவும் கொண்டாடப்பட்ட வாஷிங்டனில் திருமணம் என்ற பிரபலமான நாவலில் ஆரம்பித்து,

பல திரைப்படங்கள் உட்பட அனேக தொலைக்காட்சித் தொடர்களுக்கு திருமணம் என்ற நிகழ்வு வெற்றியைக் கொண்டுவரும் ஒரு மாயாஜாலமாகவே இருந்து வருகிறது.

”கல்யாணமும் கடந்து போகும்” 10 கதைகளைக் கொண்ட நகைச்சுவை வகை தொடராகும்.

இந்திய திருமணங்களில் நடக்கும் பல்வேறு விஷயங்களை பற்றி இனிமையாக, ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் சொல்லும்.

பார்ப்பவர்களுக்கு வெறும் பார்வையாளர் அனுபவத்தை மட்டும் தராமல், அதற்கு பதிலாக திருமணங்களில் நடக்கும் அபத்தங்களைப் பற்றியும் சிந்திக்க வைக்கும்.

இந்தத் தொடரானது வரதட்சணை, காதல், முதியவர்களிடையே உள்ள உறவு, கடல் தாண்டிய காதல், மறுமணம், ஆகியவற்றின் மூலம்
திருமணம் பற்றிய ஒட்டுமொத்த கருத்துக்களையும் படம் பிடித்துக் காட்டும்.

பொதுவாக கல்யாணம் என்று சொல்லும்போது, ​​’ஒரு நாள் கூத்து’, ‘கல்யாண கலாட்டா’ போன்ற உருவகத்துடன் உடனடியாக ஒப்பிட்டுச் சொல்வார்கள்.

இந்த நிகழ்விலிருந்து, ‘திருமணம்’ என்பது எளிதானது என்றாலும், அது அதனுடன் தொடர்புடையவர்களுக்கு மிகவும் சிக்கலானதாக இருக்கலாம் என்று புரிந்துகொள்ள முடியும்.

பார்வையாளர்களை வெறுமனே ஒரு பார்வையாளர்களாக மட்டும் வைக்காமல், அவர்களை திரைக்கு கடத்தி வர வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்”என்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி.

வலையையும் இந்த திருமண மேஜிக்கால் வளைத்துப்போடுங்கள் நலன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *