குழந்தைகளுக்காக ஒரு நாய் அட்வெஞ்சர் படம்…

இந்திய திரையுலகில் விலங்குகளை வைத்து ஒருசில படங்கள் வந்துள்ளன.  தமிழில் சில படங்கள் வெளியாகி இருக்கின்றன. 
 
மலையாளத்தில் திலீப் நடிப்பில் ரிங் மாஸ்டர் என்ற படம் நாயை மையப்படுத்தி வெளி வந்து பெரு வெற்றி பெற்றது.
 
 தற்போது  தமிழ் சினிமாவில்  நாயை மையப்படுத்தி  ஒரு படம் உருவாக உள்ளது.
 
இந்த படத்தை உறுமீன் பட இயக்குநரான சக்திவேல் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார்.
 
 காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடெட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது. 
 
 நாய்க்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் உறவையும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் விதத்தையும் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது. 
 
குழந்தைகளைக் கவரும் விதத்தில் ஒரு அட்வென்சர் படமாக இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.