கோடை வெயிலில் கருகிய வெள்ளைத்தோல் தமன்னா!!

ரெட்ஜெயண்ட் தயாரிப்பில் உதய நிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கண்ணே கலைமானே’. சீனு ராமசாமி இயக்குகிறார்.

தமன்னா, வசுந்தரா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். எப்போதும்போல இம்முறையும் வெகு அழுத்தமான கதையொன்றை கையில் எடுத்துள்ளாராம் சீனு ராமசாமி.

இக்கதை உதய நிதியின் மரியாதையை இன்னும் அதிகரிக்கச் செய்யும். அதோடு நடிப்பில் பெயர் வாங்கித் தரும் படமாகவும் இருக்கும் என்கிறார்கள்.

மதுரையின் கோடை வெயிலில் முப்பது நாட்களுக்கு மேல் படப்பிடிப்பை முடித்திருக்கின்றனர்.  வெயிலை சமாளிக்க முடியாமல் ரொம்பவே சிரமப்பட்டாராம் தமன்னா.

இப்போது பாடல் காட்சிக்காக கொடைக்கானலுக்கு இடம் பெயர்ந்திருக்கிறது கண்ணே கலைமானே டீம்.

வெள்ளத்தோல் தம்மன்னா இனியாவது குளுகுளுன்னு இருக்கட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *