’சர்கார்’ விஜய்யுடன் மோதும் ’அட்டகத்தி’ தினேஷ்??

 

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம் ராஜபுஷ்பா பிக்சர்ஸ்!

 நீண்ட இடைவெளிக்குப் பிறகு காந்திமணிவாசகம் இயக்கத்தில் “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை ராஜபுஷ்பா பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

தினேஷ் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அதிதி மேனன் நடித்துள்ளார்.

ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான கலக்கல் காமெடி. படமாக உருவாக்கி உள்ளோம்.

படம் வருகிற நவம்பர் 6 ம் தேதி தீபாவளி திருநாள் அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஒளிப்பதிவை சரவண்ணன் அபிமன்யுவும், இசையை என்.ஆர்.ரகுநந்தனும் கவனிக்க, பாடல்கள் எழுதுகின்றனர் மோகன்ராஜன், ஏக்நாத்.

கலையை ’மாயா’ பாண்டியும், எடிட்டிங்கை பொன் கதிரேசனும் அசத்த, நடனம் அமைக்கிறார் தினேஷ்.

ஸ்டண்ட் பயிற்சி திலீப்சுப்பராயன். 

தயாரிப்பு மேற்பார்வையை சிவசந்திரனும், நிர்வாகத் தயாரிப்பை ஸ்டில்ஸ் ராபர்ட்டும், இணை தயாரிப்பை திருமூர்த்தியும் மேற்கொள்ள, தயாரிகிறார் ராஜேஸ்வரி மணிவாசகம்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்குகிறார் காந்தி மணிவாசகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *