தர்புகா சிவாவின் மாயாஜாலத்தை நம்பியிருக்கும் படம்?!

 

நிமிர், என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களின் இசையமைப்பாளர் தர்புகா சிவா. மறுவார்த்தை, விசிறி மற்றும் நான் பிழைப்பேனா போன்ற பாடல்கள் மூலம் சமீபமாக ரசிகர்களைக் கட்டிப் போட்டுள்ளார் .

அறிமுக இயக்குநர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் தர்புகா சிவா .

எஸ்பி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ‘ப்ரொடக்‌ஷன் நம்பர் 2’ என தற்காலிகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தர்புகா சிவாவின் இசை உதவியோடு இளைஞர் பட்டாளத்திடம் எங்கள் படத்தை எளிதாக எடுத்துச் செல்வோம்” என பெருமையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் ஷங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *