தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்ததற்காக விமர்சனங்களை சந்தித்தேன்.. சுரேஷ் மேனன்??

 
 
இயக்குநராக, நடிகராக, தயாரிப்பாளராக வலம் வந்தவர் சுரேஷ் மேனன்!
 
இருபது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களின் மூலம்  மீண்டும் திரையில் முகம் காட்டியுள்ளார்.
 
இந்த இடைவெளி குறித்து சுரேஷ் மேனன் கூறும்போது,
 
“சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு. நான் நடிக்காமல் இருந்த காலகட்டங்களில் பல படங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள்.
 
ஆனால் என்னை எதுவும் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பின்னர்  சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களில் நடிக்கக் கேட்டார்கள்.  நல்ல கதாபாத்திரமாகவும் இருந்தது.
 
படம் வெளியான பின் அதில் நடித்ததற்கு நேர்மறை விமர்சனங்களும், பாராட்டுக்களும் கிடைத்தன. எதிர்மறையான சில கதாபாத்திரங்களுக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைப்பது ஆச்சர்யம்.
 
தற்போது வரும் இளம் இயக்குநர்கள் சிறப்பான, துணிச்சலான கதாபாத்திரங்களை எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
 
தமிழ் சினிமா துணிச்சலான கதைகள் வரும் ஒரு சிறப்பான கட்டத்தில் இயங்கி வருகிறது. எதிர்காலத்தில் இது போல சிறப்பான, அர்த்தமுள்ள அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன்.
 
நான் இயக்குவதற்காக புதிய முகம் படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி வைத்திருக்கிறேன். அதற்காக நான் அவசரப்படவில்லை.
 
சென்னை காவல்துறைக்காக போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் என்னுடைய பயனுள்ள நேரத்தை செல்வழித்து வருகிறேன்.
 
கழிவறைகள் வடிவமைப்பது கட்டுவது என சமூக செயல்பாடுகளிலும் பங்குகொண்டு வருகிறேன். சமூக வாழ்க்கையின் அனுபவங்கள் எனக்குள் இருக்கும் இயக்குநருக்கும், நடிகருக்கும் சிறப்பான விஷயங்களைக் கற்பித்து வருகிறது” என்றார்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *