நாற்பது நாட்கள் கிராம வேலைக்குச் செல்லும் நடிகை!!

 
நடிகை சனம் ஷெட்டி!!  கன்னடத்துப் பைங்கிளி.. ஐஸ்வர்யா ராயை அரைகுறை அச்சில் மிஸ் பண்ணிவிட்ட தென்னிந்திய அழகி..
 
அம்புலி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்..
 
 லண்டனில் சாஃப்ட்வேர் எஞ்சினியர் பட்டத்தை கொத்தியவர், லண்டனில் எடுக்கப்பட்ட ஒரு  டாக்குமெண்டரி மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். 
 
அம்புலிக்குப் பிறகு, கதம் கதம், சவாரி, சதுரன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
 
அதைத் தொடந்து மலையாளம் , தெலுங்கு , கன்னடம் என 4 மொழிகளிலும் நடித்து வருகிறார். 2016ம் ஆண்டின் மிஸ். சவுத் இந்தியா இரண்டாம் இடம் பெற்றார். நிறைய விளம்பரங்களிலும் நடித்துள்ளார். 
 
 விஜய் தொலைக்காட்சி  ‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற  புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை  முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.   
 
இதில், 40 நாட்கள் கிராமத்துக்கு சென்று அங்கு வேலை செய்து அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை வைத்து  எந்தவித வசதியும் இல்லாமல்  அன்றாடம் வாழ்க்கை நடத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
 
இதில், 12 பெண்கள்  கலந்து கொள்கின்றனர். இதுவரை கிராமத்து பக்கமே போகாத இந்த பெண்களை வைத்து முதன் முறையாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 
 
ஒவ்வொரு வாரமும், இறுதியில் கிராமத்து மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். போட்டியின் இறுதி வெற்றியாளரை கிராம பஞ்சாயத்து முடிவு செய்யும்.   
 
இந்த 12 பெண்களில் சினிமாவில் இருந்து கலந்து கொண்டுள்ள ஒரே பெண் சனம் ஷெட்டி!
தற்போது  கன்னடத்தில் அதர்வா, தமிழில் டிக்கெட், மேகி போன்ற படங்களில் நடித்து வரும் சனம் , தற்போது விஜய் தொலைக்காட்சி துவங்கியிருக்கும் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் ஒரு கண்டெஸ்டண்டாக கலந்து கொண்டுள்ளார்.
 
சேறு மிதிக்க வையுங்கப்பா.. அப்படியாவது தமிழ் நாட்டு விவசாயம்னா என்னன்னு தெரிஞ்சிக்கட்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *