பாங்காங்கிற்கு கடத்தப்படும் பெண்கள்..? மீட்கும் ஜெய் ஆகாஷ்!

 

ஜெய் ஆகாஷின் ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம் ‘சென்னை டூ பாங்காக்’.

இதில் கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் நடிக்க, கதாநாயகிகளாக சோனி சரிஸ்டா, யாழினி நடிக்கிறார்கள்.

யோகிபாபு, சாம்ஸ், பவர்ஸ்டார் சீனிவாசன், கும்கி அஸ்வின், இந்து, திலகவதி, கிருஷ்ணவேணி ஆகியோருடன் வில்லன் வேடத்தில் பொன்னம்பலம் மற்றும் தினேஷ் மேட்னே ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து பாங்காங்கிற்கு கடத்தப்படும் பெண்களை, இளைஞன் ஒருவன்   மீட்டுவர தனி ஆளாகக் கிளம்புகிறான்..

அங்கே சென்றதும்தான் அந்த பெண்கள் அனைவருக்கும் தீவிரவாதப் பயிற்சி அளித்து மீண்டும் இந்தியாவுக்கே நாசகார வேலைகளை செய்யத் தயார்படுத்துகிறார்கள் என்கிற அதிர்ச்சியான விபரம் தெரிய வருகிறது..

அக் கூட்டத்தின் சதியை முறியடித்து  அப் பெண்களை இந்தியாவிற்கு அந்த இளைஞன் எப்படி மீட்டு வருகிறான் என்பது தான் படத்தின் கதை.

இதை அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் விதமாக ஜனரஞ்சகமாக சொல்லப்பட்டு இருக்கிறது. விறு விறுப்பான சண்டைக் காட்சிகளும் இடம்பெறுகிறது .

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், ஸ்ரீலங்கா, தாய்லாந்து போன்ற இடங்களில் நடைபெறுகிறது.

U.K.முரளியின் இசையில்,தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய,, இயக்குநர் சதீஷ் மற்றும் சந்தோஷ் இருவர் இயக்குகிறார்கள் .

எழுத்து – இயக்கம் ; சதீஷ் மற்றும் சந்தோஷ்

இசை; U K முரளி

ஒளிப்பதிவு ; தேவராஜ் – பாலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *