பிரசன்னா -சினேகா தொடங்கி வைத்த பென்ஸ் கார் விற்பனை! (Mercedes benz launched by sneha prasanna)

பென்ஸ் கார் என்பது கோடிகளில் புரளும் பெரும்புள்ளிகளால் மட்டுமே வாங்கப்படும் வாகனம். அதை மாற்றி நடுத்தர மக்களும் பென்ஸ் கார் பயன்படுத்தும் வகையில் பி கிளாஸ் என்ற வகை கார்களை வெளியிட்டிருக்கிறது மெர்சிடஸ் பென்ஸ் கார் நிறுவனம். இதன் விலை இருபத்திநான்கு லட்சங்கள் என்று நிர்ணயித்திருக்கிறார்கள். இந்த புதிய வகை கார்களை அறிமுகப்படுத்தி தொடக்கி வைத்தது ஸ்டார் ஜோடி பிரசன்னாவும் சினேகாவும். இனி சி கிளாசுக்கான காரும் வரும் போல..

கார் அறிமுக நிகழ்ச்சியின் போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரசன்னா சினேகாவுக்கு இப்போது ஒரு பரிசு வழங்கப்படும் என்றார். உடனே பிரசன்னா மெர்சிடஸ் பென்ஸ் காரை நோக்கி கை காட்டினார். ஆனால் விழா அமைப்பாளர்கள் கொடுத்ததோ ஒரு பார்சல்! சீக்கிரம் ஒரு பென்ஸ் ஆர்டர் பண்ணுங்கப்பா புது மாப்பிளைக்கு.


Actor prasanna and sneha launched the Mercedes benz B’ class version. in an occasion the star couple they announced its price only twenty four lakhs. may be the other version C’ class cars will reach soon. then what. everybody can have a Benz car..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *