பேய்ப் படங்களுக்கு ஓய்வு கொடுக்க வரும் ’பார்த்திபன் காதல்’!

ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது “ பார்த்திபன் காதல் “ வள்ளிமுத்து இயக்குகிறார்.

எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ பார்த்திபன் காதல் “

இந்த படத்தில் யோகி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

கதை, இயக்கம் – வள்ளிமுத்து ( இவர் ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் தயாரித்த என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய P.ராஜபாண்டியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் )

படம் பற்றி இயக்குநர் வள்ளிமுத்து..

உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக உருவாக இருக்கிறது. அறிமுக நாயகன் யோகி ஓவியக் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இளம் கதாநாயகி வர்ஷிதா கிராமத்துக் கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் காமெடிப் பேய்ப் படங்களும், ஆக்ஷன் படங்களும் வந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் “ பார்த்திபன் காதல் “ ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது.

கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் விரைவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது என்றார் இயக்குநர் வள்ளிமுத்து.

ஒளிப்பதிவு – தங்கையா மாடசாமி. DF Tech

இசை – பில்லா

பாடல்கள் – யுகபாரதி

எடிட்டிங் – ஸ்ரீகாந்த் NB

கலை – S.M.சரவணன்

ஸ்டன்ட் – மகேஷ்

நடனம் – விஜிசதீஷ்

புகைப்பட கலை – ஜோஷ்வா

தயாரிப்பு மேற்பார்வை – ராஜசேகர்

மக்கள் தொடர்பு – மணவை புவன்

திரைக்கதை, வசனம் – S.குமரேசன் – ஜோ ஜார்ஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *