மகேஷூக்கு ’அங்காடித் தெரு’ போய் ’வீராபுரம்’ நிலைக்கும்! இயக்குநர் நம்பிக்கை!

ஸ்ரீ வைசாலி மூவி மேக்கர்ஸ் சார்பில் குணசேகரன் தயாரிப்பில் சுந்தர்ராஜன் மற்றும் கன்னியப்பன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கும் படம் “வீராபுரம்”.
 
 “வீராபுரம்” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு செங்கல்பட்டு அருகே நடந்து வருகிறது.
 
இப்படத்தின் நாயகனாக அங்காடித்தெரு புகழ் மகேஷும் நாயகியாக உறுதிகொள் புகழ் மேகனாவும் நடித்திருக்கின்றனர்.
 
மணற்கொள்ளையைப் பற்றிய கருத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் ஒரு உண்மைச் சம்பவ கதை.
 
தமிழ் சினிமாவில் வழக்கமாக சொல்லப்படும் காதல்கதை அல்லாது இப்படத்தில் ஒரு சமுதாய பிரச்சனையை சொல்ல விரும்பிய இயக்குநர் மணற்கொள்ளையால் நடந்த ஒரு உருக்கமான உண்மைச் சம்பவத்தை படமாக்கி வருகிறார்.
 
வித்தியாசமான கதாபத்திரத்தில் அங்காடித்தெரு மகேஷ் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு மகேஷ் மிகச்சிறந்த ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவார் எனவும் வீராபுரம் மகேஷ் என்றும் அழைக்கப்படுவார் என்றும் இயக்குநர்  செந்தில்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.  
 
  ஒளிப்பதிவு பிரேம்குமார், இசை ரிதேஷ் & ஸ்ரீதர், எடிட்டிங் கணேஷ்குமார் மற்றும் சண்டைப்பயிற்சி எஸ்.ஆர்.முருகன் ஆகியோர்  பணியாற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *