மணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…

 
பிரபல மணல் மாபியாக்களே அரசின் கட்டுப்பாடுகளுக்கு பயந்து அடக்கி வாசித்துக் கொண்டிருக்கும்போது,
 
விருத்தாசலம் மணல் மாஃபியா இளவரசனோ எதற்கும் கவலைப்படாமல் தன் இஷ்டத்திற்கு ஆறுகளிலிருந்து மணல் அள்ளி திருடி விற்று கோடி கோடியாக குவித்துக்கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சில அரசியல் அமைச்சர்களிடம் தொழிலைக் கற்றுக்கொண்டு
 
அவர்களிடமே தன் வேலையை போட்டு காட்டி மாட்டி சொத்துக்கள் சிலவற்றை எழுதிக் கொடுத்து தப்பி வந்தவர் டாக்டர் இளவரசன்.
 
அதன் பின்னர் தனது தொழிலில் வளர்த்துக் கொள்ளத் தோதான இடமாக நாம் தமிழர் கட்சியை தேர்ந்தெடுத்திருந்தார்.
 
ஆனால் அதற்குள்ளாகவே யாரோ சிலரின் உதவியால் ரஜினி மக்கள் மன்றத்தில் அவருக்கு முக்கிய பதவிகள் கிடைத்தன.
 
ஆனாலும் ரஜினியிடம் மாட்டிக்கொண்டு இப்போது மக்கள் மன்றத்தில் இருந்து துரத்தி விடப்பட்டிருக்கிறார் இளவரசன்.
 
இளவரசனைப் பற்றி பேசுபவர்கள் அனைவருமே திருவாரூர் சக்தி என்ற நபரைப் பற்றியும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் பேசுகிறார்கள்.
 
யார் இந்த திருவாரூர் சக்தி என்று விசாரித்தோம்.
 
ஒரு ஆட்டோ ஓட்டுநரான திருவாரூர் சக்தி மிகக் குறுகிய காலத்தில் தன்னை பிரமாண்டமாக வளர்த்துக்கொண்டிருக்கிறார். அதற்கு முழுமுதற் காரணம் டாக்டர் இளவரசன்.
 
 புரோக்கர் என்று திருவாரூர் வட்டாரத்தில் அழைக்கப்படும் சக்திக்கும் இளவரசனுக்கும் உள்ள தொடர்பு என்னவென்று இளவரசனுக்கு நெருங்கிய வட்டாரங்களே ஆச்சரியத்துடன் கேட்கின்றன.
 
திருமணமாகி பொண்டாட்டியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சக்திக்கு ஏராளமான அந்த மாதிரி பெண் தொடர்புகளும் உண்டாம்.
 
ஒரு மைனர் பெண்ணை கடத்திச் சென்று கட்டாய தாலி கட்டி அது மிகப் பெரும் பிரச்சனையாகியுள்ளது.
 
காவல் நிலையத்தில் சக்தியும் அவரது மனைவியும் சேர்ந்து இனி பிரச்சினை செய்யமாட்டோம் என்று பத்திரத்தில் எழுதி கொடுத்து தப்பித்து வந்திருக்கிறார்கள்.
 
அதற்கு திமுக முக்கிய பிரமுகர் ஒருவர் உதவியிருக்கிறார்.
 
இதேபோல பல சம்பவங்கள் உண்டு என்கிறார்கள் திருவாரூரில்.
 
இந்த சக்தி நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.
 
இவர் மூலமாகத்தான் நாம் தமிழர் கட்சியில் இணைய டாக்டர் திட்டமிட்டிருந்தார்.
 
ஆனால் மக்கள் மன்றத்திற்கு வந்த பிறகு சக்தியையும் தன்னோடு சேர்த்து மக்கள் மன்றத்துக்கு இழுத்துக் கொண்டு வந்தார் டாக்டர்.
 
நமக்கு ஆகாத நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சக்தியை மக்கள் மன்றத்தில் ஏன் சேர்க்க வேண்டும் என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் இடையே பெரும் மனக் கசப்பு கடந்த பல மாதங்களாக இருந்து வந்துள்ளது.
 
சக்தியின்   அராஜக நடவடிக்கைகள் எல்லை மீறிப்போவதைக் கண்டு தலைமை அவரை மன்றத்திலிருந்து சில மாதங்களுக்கு முன்பு நீக்கியது.
 
ஆனாலும் ரஜினி மக்கள் மன்றம் திருவாரூர் என்ற பெயரிலேயே தொடர்ந்து போஸ்டர்களை அடித்து வந்தார் சக்தி.
 
இதற்கு முழுக்க முழுக்க டாக்டர் இளவரசன் கொடுத்த ஆதரவு தான் காரணம்.
 
அதனை அடுத்து தற்போது இளவரசன் நீக்கத்துக்கு முன்பாகவே சக்தியையும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள் ரஜினி மக்கள் மன்றத்தில்.
 
டாக்டர் இளவரசன் அவருக்கு எதிராக யார் தலைமைக்கு புகார் அனுப்பினாலும் அதை சக்தியிடம் சொல்லி சம்பந்தப்பட்ட நபரைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் ஏற்றி அவமானப்படுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். 
 
மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்று ரஜினி மக்கள் மன்றத்தின் விதிமுறைகள் கூறுகிறது.
 
ஆனால் மாநில அமைப்பு செயலாளர் இளவரசனோ அந்த விதிமுறைகளை தூரப்போட்டுவிட்டு சக்தியுடன் தினமும் தொடர்பிலிருந்தார்.
 
சக்தியை இரண்டு நாளுக்கு ஒரு தடவை நேரில் பார்க்காவிட்டால்  அவருக்கு தூக்கமே வராது.
 
சக்தியுடனான தொடர்பு இன்றுவரை இளவரசனுக்கு தொடர்கிறது.
 
மன்றத்திலிருந்து சக்தியும் இளவரசனும் நீக்கப்பட்ட பிறகும் கூடிப் பேசி ரஜினியைப் பற்றியும் மக்கள் மன்றத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பற்றியும்
 
போலியான பல தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவதற்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
இருவரும் சந்தித்துப் பேசிய வீடியோக்கள் உள்ளிட்ட பல அதிரடித் தகவல்கள் விரைவில் வெளி வர இருக்கிறது என்கிறார்கள் திருவாரூர் ஏரியா ரஜினி ரசிகர்கள்.
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *