ரஜினி, கமலை அடுத்து சிம்புவும் அரசியல் கட்சி தொடங்குகிறார்??

தமிழ்சினிமாவில் நடிகர்கள் அரசியல் களம் காணும் பரபர நேரம் இதுபோல… ரஜினி, கமல், விஷால் இவர்களை அடுத்து அரசியல் களம் காணப்போகிறாராம் எஸ் டி ஆர். 

ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு உங்க வீட்டு முன்னாடி அமர்ந்து போராடுங்கள் என இவர் கொளுத்திப் போட்ட திரி தமிழகத்தை ஒரு போராட்டக் களமாகவே மாற்றி வைத்தது. 

இப்போது இவருக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் ஒரு சில எதிர்ப்பை முன் வைத்துள்ளது. 

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும் சிம்புவுக்கும் உள்ள மோதல் வலுத்துவரும் நேரத்தில் சிம்பு தன்னை அரசியல் களத்தில் இணைத்துக் கொள்ளும் திட்டத்தை நாளை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

நடிகர் T.ராஜேந்தர் அவர்கள் நாளை புதிய கட்சி அறிவிப்பை அறிவிக்கவுள்ளதாகவும்,

அதில் தனது மகன் சிம்பு அரசியலில் ஈடுபடுவது பற்றி அறிவிப்பு செய்ய உள்ளதாகவும் அத் தகவல் தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *