விட்டுவிடுங்கள்… நடிக்க விருப்பமில்லை- நடிகர் சத்யராஜ் மகள் அறிக்கை

 

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் தன்னைப் பற்றி வரும் செய்தி உண்மையில்லை என மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அது, 

”நான் நடிக்க ஆர்வமோடு இருப்பதாக செய்திகள் வருகின்றன.  அந்த செய்தியில் உண்மையில்லை.

கடந்த ஏழு வருடங்களாக சென்னையில் உள்ள இரண்டு கிளினிக்கில்  நியூட்ரீஸியனிஸ்ட் ஆக பணிபுரிகிறேன்.

அந்த துறையில் மேற்படிப்பை (பி எச் டி) முடிக்க இருக்கிறேன். என் கவனம் முழுக்க என் துறை மீதும் என் மருத்துவம் சார்ந்த முயற்சிகளிலுமே உள்ளது. 

சினிமா மீது  மிகுந்த மரியாதை உண்டு. நிறைய சினிமா பார்ப்பேன்,  நல்ல ரசிகை அவ்வளவே. ஆனால் சினிமாவை எனது கேரியராக நினைத்ததில்லை. 

உடல் நலம் குறித்த ஒரு குறும் படத்தில்  நடித்தேன். அது மக்களுக்கான உணவு பழக்க வழக்கங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மட்டுமே. 

அதன் காரணமாகவோ எனக்கு சினிமா ஆர்வம் இருப்பதாக செய்திகள் வருகின்றன, அது முற்றிலும் தவறான செய்தி. தவிர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்” என நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அனுப்பிய செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.