‘100% பெற்றோர் மூலமே குழந்தைப் பேற்றை அளிக்க வேண்டும்’ -கிராஃப்ட் மருத்துவமனை கொள்கை

சென்னை: 2012 நவம்பர்; கருவுறாமைக்கான சிகிச்சையில் முன்னணி வகிக்கும் கிராஃப்ட் மருத்துவமனை & ஆய்வு மையம் தனது மையத்தைச் சென்னை கீழ்ப்பாக்கத்தில் 2012 நவம்பர் 14 ஆம் தேதி திறந்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் மருத்துவமனையைத் தொடங்கி வைத்தார். நடிகரும் சமூக ஆர்வலருமான திரு பாரத் சுரேஷ் கோபி ஆணுறுப்பு நோயியல் மற்றும் பாலியல் பிரிவுகளைத் திறந்து வைத்தார். பிரபல திரைப்பட நடிகைகளான திருமதி சுஹாசினி மணிரத்னம் மற்றும் திருமதி குஷ்பூ சுந்தர் ஆகியோர் லேலரோஸ்கோபி மற்றும் குழந்தையின்மைப் பிரிவுகளைத் தொடங்கி வைத்தனர்.

கிராஃப்ட் மருத்துவமனையில் அதி நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் நோய்க்குறி அறிதல் மற்றும் சகிச்சைக்கான கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. ஒரே கூரையின் கீழ் அனைத்து சிகிச்சைகளையும் அளிக்கும் வகையில் தன்னிறைவு பெற்ற மருத்துவ மையமாக கிராஃப்ட் விளங்குகிறது. முறையான சிகிச்சை மற்றும் பாதுகாப்பிற்கு அடிப்படையான நோய்க்குறி அறிதலுக்கு கிராஃப்ட் முழுமையான உத்தரவாதம் தருகிறது.

இது குறித்து கிராஃபட் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் முகம்மது அஷ்ரஃப் பேசுகையில் ‘இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் காரணியாக கிராஃப்ட் மருத்துவமனையில் ஐவிஎஃப், ஐசிஎஸ்ஐ, டிஇஎஸ்இ ஐசிஎஸ்ஐ மற்றும் ஆண் மலட்டுத் தன்மைக்கான மைக்ரோ டீஸ் ஐசிஎஸ்ஐ உள்ளிட்ட குழந்தையின்மை சிகிச்சை முறைகள் வழங்கப்படும். கேரள மாநிலம் கொடுங்கலூர் என்னும் சிறிய ஊரில் தொடங்கிப் பின்னர் கள்ளிக்கோட்டை, மத்தியக் கிழக்கு நாடுகள் என சிறகுகளை விரித்துத் தற்போது சென்னை மக்களுக்குச் சேவை புரிய இங்கு மையத்தைத் திறந்துள்ளோம். விரைவில் பூபனேஷ்வர், கோவா மற்றும் புது டெல்லியிலும் மையங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். கருமுட்டைகளை வெற்றிகரமாக உறைய வைக்கும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதன் காரணமாக கருவுறும் தன்மை 60% முதல் 70% சாத்தியமாகிறது. இங்கு ஒரே ஒரு முறை பெற்ற ஐவிஎஃப் மற்றும் ஐசிஎஸ்ஐ சிகிச்சைக்குப் பின்னர் 300க்கும் அதிகமான தம்பதிகள் 3-4 ஆண்டு இடைவெளியில் 2 ஆவது மற்றும் 3 ஆவது குழந்தைகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது கிராஃப்ட் மருத்துவமனையின் பிரத்யேகச் சாதனை எனில் மிகையில்லை’ என்றார்.

தம்பதிகளின் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தருவது தாய்மை ஆகும். கருவுறாமைக்கான காரணியை முதலிலேயே கண்டறிந்து, தனிப்பட்ட சிகிச்சை, ஆலோசனை, தொடர் சிகிச்சை ஆகியவற்றைத் தவறாமல் எடுத்துக் கொள்வது குழந்தையின்மை சிகிச்சையில் முக்கியமாகும். கருவுறாமை சிகிச்சை வெற்றி பெற அதி நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் கருவிகள், ஆய்வுக் கூடங்கள், பச்சிளம் குழந்தை மருத்துவம் உள்ளிட்ட மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள், உயர் பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் & தொழில்நுட்பக் குழுவினர் ஆகியோர் அவசியம். கருவுறாமை சிகிச்சை அளிப்பதில் முன்னணி வகிக்கும் கிராஃப்ட் மருத்துவமனை ‘100% பெற்றோர் மூலமே குழந்தைப் பேற்றை அளிக்க வேண்டும்’ என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது.

கிராஃபட் மையத்தைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் கூறுகையில் ‘இன்றைய உலகின் மனித இனத்தில் கருவுறாமைப் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே போவது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குடும்ப அமைப்பின் சிதறல், வாழ்வியல் மாற்றங்கள், உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் மாசு ஆகியவை இதற்குக் காரணிகளாக உள்ளன. குழந்தையின்மை சாபக்கேடாகக் கருதப்படும் சூழலில் மருத்துவ மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கான சிகிச்சையில் மகத்தான புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பொது மக்களிடையே இதற்கான விழிப்புணர்வு முழுமையாக ஏற்படாத நிலையில் கிராஃப்ட் மருத்துவமனை இடைவெளியை நிச்சயம் குறைக்கும்’ என்றார்.

1981 இல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி இந்தியாவில் திருமணமான 13% பெண்களுக்குக் குழந்தையில்லை (கிராமம் 13.4% & நகரம் 11.3%). இது 2001 இல் 16% ஆக உயர்ந்தது (கிராமம் 15.6% & நகரம் 16.1%). திருமணமான சரிபாதி பெண்களுக்குக் குழந்தையில்லை என்று அதிகரித்து 2001 இல் 70% என்னும் உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய தேதியில் நாட்டில் சுமார் 30 மிலியன் தம்பதிகள் கருவுறாமைப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தம்பதிகளுக்குக் குழந்தையில்லை என்றால் கருவுறாமைக்குச் சந்தேகமின்றிப் பெண்களே காரணம் என்று முன்பு கூறி வந்தனர். ஆனால் கருவுறாமைக்குப் பெண்கள் மட்டுமே காரணமில்லை என்பது மருத்துவ ரீதியாக இன்றைக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

கிராஃப்ட் மருத்துவமனை & ஆய்வு மையம்

ஐயுஐ, ஐவிஎஃப், ஐசிஎஸ்ஐ, லேபராஸ்கோபிக் சிகிச்சை, பச்சிளம் குழந்தை மருத்துவம் உள்ளிட்ட அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் கருவிகளுடன் கிராஃப்ட் மருத்துவமனை & ஆய்வு மையம் விளங்குகிறது. ஐவிஎம் மற்றும் ஐசிஎஸ்ஐ சிகிச்சை மூலம் அதிக எண்ணிக்கையில் குழந்தைப் பேற்றை உருவாக்கித் தந்துள்ள கிராஃப்ட் மருத்துவமனை, கருவுறாமைக்கான அனைத்து சிகிச்சை முறைகளையும் ஒரே கூரையில் கொண்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக கிராஃட்ப் மருத்துவமனை ‘ஐவிஎஃப் சுரக்ஷா’ என்ற பெயரில் ‘பணத்தைத் தம்பதிகளுக்குத் திரும்பத் தரும் பாலிசியை’ அறிமுகப்படுத்தி உள்ள்து. ‘இனப்பெருக்க உறுப்பு அறிவியல் கிராஃப்ட் அகாடமி’ இனப்பெருக்க மருத்துவ எஃப்என்பி பயிற்சிக்கான அங்கீகரிக்கப்பட்ட மையமாகும். கருவுறாமை சிகிச்சைக்காக இந்தியாவிலேயே ஐஎஸ்ஓ 9001-2000 தரச் சான்றிதழ் பெற்ற முதல் மருத்துவமனை கிராஃப்ட் மையம் என்பதும் குறிப்பிட்த்தக்கது. கேரளாவில் காணொலி எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மற்றும் ஐயுஐ ஆகிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய முதல் மருத்துவமனை கிராஃப்ட் மையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *