4 நடுவர்கள்; 4 அமர்வுகள்; பேச்சுப்போட்டி உற்சாகத்தில் மிதந்த கல்லூரி!

   

சென்னை பெரம்பூர் ‘ஸ்ரீமத் கஸ்தூர்பா நிம்சந்த்ஷா பி. முத்தையா செட்டி விவேகானந்தா வித்யாலயா இளநிலைக் கல்லூரி’யில் மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. 

சு. கணேஷ்குமார்  போட்டியின் நடுவர் பொறுப்பேற்று மிக அழகாக நெறிப்படுத்தினார்!

 Podium (பேச்சு மேசை) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த  இந்த பேச்சுப் போட்டியினை  ‘வெற்றி விடியல்’ சீனிவாசன் துவக்க உரையாற்றி தொடங்கி வைத்தார்.

பேச்சுப் போட்டி நான்கு அமர்வாக நடந்தது!

 நிகழ்வில் சிறப்பு விருந்தினராக  சிநேகிதி பாரதி பத்மாவதி கலந்துகொண்டார். 

பாரதி பத்மாவதி பேச்சுப் போட்டியின் ஒரு அமர்வை நெறிப்படுத்தி நடத்த, இன்னொரு அமர்வை போடியம் அமைப்பின் நிறுவனர்  வெங்கடரமண ஜோதிபாபுவும்,   மற்றொரு அமர்வை சென்னை ஜே.சி.ஐ. அமைப்பின் துணைத்தலைவர் ஏ.எஸ். மோகன் ஆகியோரும் வழி நடத்தினார்கள்.

 பேச்சுப் போட்டியின் ஒரு அமர்வை நடுவர் பொறுப்பேற்று  நடத்தினார்  சு. கணேஷ்குமார் .  

  வடசென்னை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எ.த. இளங்கோ   நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்துச் சிறப்பித்தார்!

 கல்லூரியின் முதல்வர்  கி. சுஜாதாவும்,   கல்லூரி நிர்வாகத்தினரும்  ஒத்துழைப்பும்,வரவேற்பும்,விருந்து உபசரிப்பும் செய்து மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *