ஆகம் விமர்சனம்

Aagam-movie-23
நம் நாட்டில் உள்ள அறிவு ஜீவிகள் அனைவரும் படித்து முடித்து நம் நாட்டின் பொருளாதாரத்தை பெருக்காமல், பணத்திற்காக அயல் நாடுகளுக்கு சென்று அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பெருக்குகிறார்கள்.. இப்படியாக நம் நாடு வளர்ச்சி அடையாமல் நம்மை சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும் முன்னேற்றம் கண்டு வருகின்றன…இதையெல்லாம் கண்டு தன் உணர்ச்சிகளை வெளிக்கொனரும் ஒருவனின் கதைதான் இந்த ஆகம்..

இந்திய நாட்டில் உள்ள அனைவரும் படித்து முடித்து விட்டு இந்தியாவில் தான் வேலை பார்க்க வேண்டும் என்ற நாட்டின் மேல் நல்ல எண்ணம் கொண்ட ஒரு வாலிபனாக எண்ட்ரீ ஆகிறார் நாயகன் இர்பான். இந்த எண்ணத்தினை மக்கள் மனதிலும் புகுத்துகிறார்.

அவருடைய அண்ணன் பாலாஜி மோகன் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும் என்ற கனவில் வாழ்கிறார். இந்திய நாட்டு இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஒரு ஏஜென்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள் ஒய் ஜி மகேந்திரனும் அவரது மகனாக வரும் ரியாஸ்கானும். இவர்கள் இருவர்கள் தான் படத்தின் வில்லனாக வருகிறார்கள்…

இந்த ஏஜென்சி மூலம் அமெரிக்கா செல்வதற்கு தனது சகோதரன் இர்பானுக்கு தெரியாமல் ஏற்பாடுகள் செய்கிறார் பாலாஜி மோகன். அவரது ஆசைப்படியே பாலாஜி மோகனும் அமெரிக்கா சென்று விடுகிறார். பாலாஜி மோகன் போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா வந்துள்ளார் என அமெரிக்க போலிஸாரால் கைது செய்யப்படுகிறார்.

இர்பான் எப்படி தன் அண்ணனை மீட்கிறார்??? அந்த ஏஜென்சி வைத்திருப்பவர்களை எவ்வாறு பழி வாங்குகிறார் என்பதே மீதி கதை…

நல்ல ஒரு கதை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம். இதற்காக இயக்குனருக்கு ஒரு பெரிய பூங்கொத்து ஒன்று கொடுத்து விடலாம். கதைக்கு மட்டும் தான்..

மக்களிடம் அந்த கதைகளை எடுத்துச் செல்லும் விதத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். எட்டு வருடங்களாக கதைக்காக பாடுபட்ட இயக்குனர் இன்னும் ஒரு வருடம் படத்தினை கொண்டும் செல்லும் விதத்திலும் பாடுபட்டிருக்கலாம்.

நாயகன் இர்பான் தனக்கேற்ற பணிகளை செய்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இது அவருடைய சினிமா என்ற ஏணியில் ஏறுமுகமாக இருக்கும் ஒரு படமாக அமைவதில் கொஞ்சம் சறுக்கல் தான்..

இந்த படத்தில் ஒரு நாயகியும் இருக்கிறார். அவர் தான் தீக்‌ஷிதா. மொத்தமாக ஐந்து முறை காட்சிகளில் வந்து செல்வார். நாயகியை அறிமுகப்படுத்தும் காட்சியில் நாயகனை தெரிந்தும் தெரியாதது போல் ஒரு காட்சி இருக்கிறதே அது எதற்காக என்று புரியவில்லை.

விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகிய இசை பாடலில் கை கொடுக்கவில்லை என்றாலும், பின்னனி இசையில் சிறிதளவு ரகம். ஒளிப்பதிவு சரண் கொஞ்சம் கவனம் வைத்திருக்கலாம்.

வில்லனாக வரும் ரியாஸ்கான் மற்றும் ஒய் ஜி மகேந்திரன் இருவரும் சைலண்டாக இருந்து அசத்தியிருக்கிறார்கள்… ரியாஸ்கானை அவ்வப்போது மங்காத்தா அஜித் போன்ற மாஸ் காட்சிகளை வைத்து எரிச்சலடைய வைக்கிறார்கள்.

ஆனால் இளைஞர்கள் அனைவரும் நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒரு மையக்கருத்தை தான் இயக்குனர் கொடுத்திருக்கிறார். தனது முதல் படத்திலேயே முக்கியமான கதையினை கொடுத்த இயக்குனரை நிச்சயமாக பாராட்டலாம்..

படத்தினை எடுக்கும் போது கவனத்தினை அதிகமாகவே செலுத்தியிருந்தால் பாராட்டு மழையில் நிச்சயமாக நனைந்திருப்பீர் இயக்குனரே….சற்று தவற விட்டு விட்டீர்களே!!!

ஆஹா ஒஹோ என்று இல்லாத ஆஹா இந்த ஆகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *