ஆறாது சினம் – விமர்சனம்

Aarathu Sinam
யாருடனும் போட்டி போடாமல் தனக்கென ஒரு பாதையை உருவாக்கி அதில் தன் நடிப்புத் திறமையை நிருபித்து வரும் அருள்நிதியின் வெற்றி பயணத்தில் “ஆறாது சினம்” ஒரு மைல்கல் தான்.

ஒருவனை பழி வாங்க அவனைத்தான் அழிக்க வேண்டும் என்பதில்லை. அவனை சுற்றி, அவனை நம்பி வாழும் ஒரு ஜீவனை அழித்தாலே அவனை பழி வாங்கிய மாதிரிதான். இப்படி ஒரு அருமையான கதைக்களம் தான் இந்த “ஆறாது சினம்”.

மலையாளத்தில் பிருத்திவிராஜ் நடிப்பில் வெளிவந்த “மெமரீஸ்” என்ற படத்தின் ரீமேக் தான் இந்த “ஆறாது சினம்”. தமிழில் இயக்கியிருக்கிறார் இயக்குனர் அறிவழகன். படத்தின் முதலே என்கவுண்டரில் இருந்து ஆரம்பிக்கிறது. ஒரு நேர்மையான அசிஸ்டண்ட் கமிஷ்னராக மனைவி, குழந்தையுடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் அருள்நிதி.

போலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் அருள்நிதியால் பாதிக்கப்பட்ட ஒரு ரவுடி ஜெயிலில் இருந்து வெளியே வருகிறான். வெளியே வந்ததும் அருள் நிதி மேல் உள்ள ஒரு கோபத்தால் அவருடைய மனைவியையும், குழந்தையையும் கொன்று விடுகின்றான்.

இதனால் அதிர்ச்சி அடைந்து ஏதோ ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று எப்போதும் மது போதை வாழ்க்கையில் வாழ்கிறார் அருள்நிதி. தாடியுடனும் எப்போதும் ஒரே சட்டையுடன் ஒரு அழுக்கான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அவரது அம்மாவின் ஆசைக்கிணங்க அரை மனது வாழ்க்கையுடன் ஒரு பணியில் சேர்ந்து ஒரு வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். வெவ்வேறு இடங்களில் இரண்டு பிணங்கள் கிடைக்கிறது. அதன் பிறகு சிறிது நாட்களில் ஒரு பிணம் கிடைக்கிறது. அதன் பிறகு தான் தெரிகிறது இந்த அனைத்து கொலைகளுக்கும் ஒருவரே சம்மந்தம் ஆகிறார் என்று. பின்னர் இவரது போலிஸ் அறிவை பயன்படுத்தி சின்ன சின்ன தடயங்களை வைத்து அந்த கொலைகாரனை நெருங்குகிறார்.

கடைசியாக அந்த கொலைகாரன் யார்??? எதற்காக அந்த கொலைகளை செய்தான்??? அவனின் முடிவு என்ன ஆனது என்பதே மீதிக் கதை….

படத்தின் கதைக்கு ஏற்ற ஒரு நடிப்பை தந்திருக்கிறார் அருள்நிதி. தாடியுடன் ஒரு நடிப்பையும், தாடி இல்லாமல் குடும்பத்துடன் சந்தோஷாமாக வாழும் ஒரு நடிப்பையும் நிறைவாகவே பூர்த்தி செய்திருக்கிறார்.

சின்ன சின்ன காட்சிகளில் மட்டுமே வந்து போகும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அழகை வைத்து அனைவரையும் கட்டிப் போடுகிறார். டத்தோ ராதாரவி மற்றும் சார்லியின் நடிப்பு அருமை. எதற்காக ரோபோ ஷங்கரின் கதாப்பாத்திரத்தை இவ்வளவு மெனக்கெடுத்தார்கள் என்று தெரியவில்லை. அவருக்கு காமெடி ரோலா இல்லை சிரீயஸ் ரோலா என்று தெரியாத அளவில் ஒரு ரோல்…

இது முழுக்க முழுக்க அருள்நிதியின் திரைக்கதை மட்டுமே. அவருடைய திறமையால் மட்டுமே இது சாத்தியமாகும். தமனின் இசையில் பாடல்கள் ரகம்… தனிமையே பாடல் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கிறது..பின்னனி இசை அருமை..

படத்தின் கடைசி வரை கொலைகாரன் யார் என்று முகம் காட்டாமல் கொண்டு சென்றிருப்பது படத்திற்கு பெரிய பலம்.. கிடைக்கும் சின்ன சின்ன தடயங்களை வைத்து நகரும் கதை நல்ல ஒரு மூவ்மெண்ட்..

அருள்நிதி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும் போது சில மாற்றங்கள்ஐ அவரிடம் செய்திருக்கலாம். ரோபோ ஷங்கரின் கதாபாத்திரத்தை குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது…

ஆறாது சினம் – அருள்நிதியோடு ஒரு பதட்டமான பயணம்..

Leave a Reply

Your email address will not be published.