இசையில் மிரட்டிய அனிருத்… மகிழ்ச்சியில் அஜித்..!!

ajith-vedalam
தல அஜித் நடித்து வரும் ‘ஏகே 57’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இவர் ஏற்கனவே இந்த படத்திற்கான தீம் மியூசிக்கை கம்போஸ் செய்து கொடுத்துவிட்டார் அஜித்திடம். அதன்பின் இரவு பகலாக இந்த படத்திற்கான பாடல்களை இசையமைத்து வந்தார் அனிருத்.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் அனைத்து பாடல்களுக்கான இசையையும் இசையமைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பாடல்களை கேட்ட அஜித்தும் மகிழ்ச்சியில் உள்ளாராம்.

வேதாளம் படத்தில் இடம் பெறும் மிரட்டலான பாடல்களை தான் இந்த படத்திலும் கொடுத்துள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *