”மெர்சல்” படத்திற்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்… காரணம் இதுதானாம்..!

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘மெர்சல்’. படத்தினை வரும் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு அனைத்து வேலைகளையும் மிகவும் மும்முரமாக நடத்தி வருகிறது.

ஆனால், விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து இன்னும் தடை இல்லா சான்று வராததால் மெர்சல் படம் வெளிவருவது குறித்து சந்தேகம் எழுந்து வருகிறது.

அதே சமயத்தில் மெர்சல் படத்தை பார்க்க விஜய் ரசிகர்களை காட்டிலும் அஜித் ரசிகர்கள் தான் அதிக ஆவலோடு இருக்கிறார்களாம். காரணம் என்னவென்று கேட்டால் அதற்கு அட்லீ என கூறுகிறார்கள்.

விஜய்யை வைத்து படம் இயக்குவதால் சமூக வலைதளங்களில் தன்னை கலாய்த்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு காட்டமான சவால் விட்ட அட்லி, ‘மெர்சல்’ படத்தில் ஒரு காட்சி வைத்திருக்கிறேன், அந்த ஒரு காட்சி போதும் நீங்கள் மிரள. வேறு எந்த படத்திலும், எந்த ஹீரோவையும் காட்டாத வகையில் பெரிய மாஸ் காட்சியாம் அது.

அட்லீயின் இந்த சவாலால் அது எத்தகைய காட்சி என்பதை பார்த்தே ஆக வேண்டும் என்பதற்காக அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இருக்கிறார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *