யார் சொன்னா, நான் காப்பி அடிக்கிறேன் என்று..?? அஜித் ரசிகர்கள் மீது கொந்தளித்த அட்லீ!

தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்து ‘மெர்சல்’ படத்தினை இயக்கி வருகிறார் அட்லீ. தெறி, மெர்சல் என இரண்டு படங்களும் பிற படங்களின் காப்பி போல் உள்ளது என அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அட்லீக்கு எதிராக மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

பல முறை அட்லீயின் படங்களை விமர்சனம் செய்த அஜித் ரசிகர்கள் மீது கோபம் கொள்ளாத அட்லீ, முதல் முறையாக அஜித் ரசிகர்களுக்கு எதிராக தனது பதிவினையும் சவாலையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கூறிய அட்லி, “நான் மற்ற படங்களை பார்த்து காப்பி அடிக்குறேனா இது அப்பட்டமான பொய். ஒரு படத்தின் கதையை உருவாக்க நாங்கள் எப்படி போராடுகிறோம் தெரியுமா?, ஒரு அறையில் அமர்ந்து கொண்டு சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கதைக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

என்னை காப்பி என்று சொன்னவர்களுக்கு ’மெர்சல்’ படத்தில் ஒரு காட்சி இருக்கிறது. அதை பார்த்து விட்டு சொல்லுங்கள் எங்கள் உழைப்பு தெரியும். அதே போல என் திறமை தெரியும், என்று சவால் விடுத்துள்ளார். மெர்சல் படத்தில் பல காட்சிகள் ரசிகர்களை மெர்சல் செய்யும். இதுவரை இப்படி ஒரு காட்சி வந்தது இல்லை என்று பேசும் அளவுக்கு வித்தியாசமாக இருக்கும், என்று கூறியுள்ளார்.

இயக்குநர் அட்லியின் இந்த சவால், அஜித் ரசிகர்களை கோபமடையச் செய்தாலும், விஜய் ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *