பெங்களூர் நாட்கள் – விமர்சனம்

Bangalore-Naatkal-Stills-Photos-Arya-Sri-Divya-Parvathy-9

மலையாளத்தில் நல்ல ஹிட் அடித்த பெங்களூர் டேஸ் படத்தை அப்படியே தமிழில் “பெங்களூர் நாட்கள்”ஆக கொடுத்திருக்கிறார்கள் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமாஸ்.

எம் பி ஏ படிப்பதை லட்சியமாக வைத்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. தனது கனவில் ஜாதகம் மூலம் திருமணம் என்னும் இடி வந்து விழுகிறது. . எனக்கென்ற ஒரு பாதை, அதை நானே உருவாக்குவேன், நானே சொல்வேன் என்ற பாதையில் செல்கிறார் ஆர்யா. வாழ்க்கையில் பெரிதாக எதற்கும் ஆசைப்படாமல் ஏதோ ஒரு வாழ்க்கை என வாழ்கிறார். கிராமம், விவசாயம், மண்வாசனை, கிராமத்து பெண்ணுடனான திருமணம் இதை மட்டுமே விரும்பும் ஒரு பாத்திரமாக பாபி சிம்ஹா வருகிறார். அம்மாவின் ஆசை கட்டளைக்காக சாப்ட்வேர் நிறுவனத்திற்கு செல்கிறார் பாபி.

ஸ்ரீதிவ்யா, ஆர்யா , பாபி சிம்ஹா மூவரும் கசின்ஸ். சிறு வயது முதலே இணை பிரியா நண்பர்களாக வாழ்ந்து வருகின்றனர். மூவருக்கும் பெங்களூர் செல்வது சிறு வயது முதலே ஆசையாக இருக்கிறது. ஸ்ரீ திவ்யாவை மணக்கும் மாப்பிள்ளையாக பெங்களூரில் இருந்து வருகிறார் ராணா. ஸ்ரீ திவ்யா, ராணாவை திருமணம் செய்து கொண்டு பெங்களூர் செல்கிறார். பாபி சிம்ஹாவும் பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிக்கு சேர்கிறார்.

இருவரும் பெங்களூர் சென்றதால் ஆர்யாவும் பெங்களூர் சென்று ஒரு பைக் மெக்கானிக்காக பணி புரிகிறார். ராணாவிற்கும் ஸ்ரீதிவ்யாவிற்கும் ஒரு புரிதல் இல்லா வாழ்க்கையாக இல்வாழ்க்கை ஓடுகிறது. பாபி சிம்ஹாவின் வாழ்க்கையில் வந்த ராய் லெட்சுமியின் காதல் தோல்வியில் முடிகிறது. ஆர்யா-பார்வதிக்கு உள்ள காதலில் ஆர்யாவின் வேலையை காரணம் காட்டி பார்வதியை விட்டு விலகிச் செல்ல வைக்கிறார் பார்வதியின் தாயாக வரும் ரேகா.

கடைசியாக ராணா-ஸ்ரீதேவியின் இல்வாழ்க்கை என்ன ஆனது??? பாபிசிம்ஹாவின் ஆசை நிறைவேறியதா??? ஆர்யா வாழ்க்கையில் வெற்றி பெற்று பார்வதியின் கரங்களை பிடித்தாரா??? என்பதே மீதிக் கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாஸ்கர்.

வழக்கமான தன் நடிப்பால் அசத்துகிறார் ஆர்யா. பார்வதியுடனான காதல் காட்சிகளிலும், நண்பர்களுடனான அரட்டை அடிப்பதில் உள்ள காட்சிகளிலும் அசத்திருக்கிறார் ஆர்யா. ஒரு குழந்தைத்தனமான நடிப்பில் விளையாடியிருக்கிறார் ஸ்ரீ திவ்யா. கலகலப்பான தன் பேச்சால் அனைவரையும் கவர்கிறார். இந்த பாத்திரம் இவருக்கென்றே அமைந்தது என அப்பாவித்தனமான ஒரு முகத்துடன் வரும் பாபி சிம்ஹா தனது நடிப்பிற்கு பால் ஊற்றுகிறார். பாகுபலியில் பார்த்த முரட்டுத்தனமான ராணாவா இது?? என கேட்கும் அளவிற்கு அமைதியான நடிப்பில் வேறு முகத்தை காட்டியிருக்கிறார் ராணா.

படத்தின் முதல் பாதி சற்று வேகம் கொண்டு சென்று இரண்டாம் பாதியில் வேகமே எடுக்காமல் மெதுவாக ஊர்ந்து செல்வது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. பின்னணி இசை, பாடல்கள் படத்திற்கு கை கொடுக்கவில்லை. பாபி சிம்ஹாவின் தாயாக வரும் சரண்யா பொன்வண்ணன் ஆங்காங்கே வந்து சற்று சிரிக்க வைத்துவிட்டு செல்கிறார். குகனின் ஒளிப்பதிவில் பெங்களூர் மிகவும் அழகாக தெரிகிறது.

பெங்களூர் நாட்கள் – குடும்பங்களுடன் ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *