கலர்புல்லாக கண்ணை கவரும் போகனின் ‘செந்தூரா’…

ஜெயம் ரவி மற்றும் அரவிந்த சாமி நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது ‘போகன்’. இது ரசிகர்கள் தரப்பில் இருந்தும் மக்கள் தரப்பில் இருந்தும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது.

படத்திற்கு இசையமைத்துள்ளார் இமான். இந்த படத்தில் இவரது இசையில் உருவாகியுள்ள செந்தூரா பாடல் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இளைஞர்கள் பலர் தங்களது விருப்பமான பாடலாக செந்தூரா பாடலையே தேர்வு செய்துள்ளனர்.

இந்த பாடலின் ஒளிப்பதிவும் பிரம்மிக்கும் படியாக அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் கலர்புல்லாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *