Directors

பொள்ளாச்சி சம்பவத்தை கையிலெடுக்கும் இயக்குநர் சுசீ!

பொள்ளாச்சி சம்பவத்தை கையிலெடுக்கும் இயக்குநர் சுசீ!

Directors, News
சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'சுட்டு பிடிக்க உத்தரவு' படத்தில் தான் நடித்த அனுபவத்தைப் பற்றி இயக்குநர் சுசீந்திரன் கூறியதாவது :- 'சுட்டு பிடிக்க உத்தரவு' படத்தில் என் கதாபாத்திரத்திற்கு யாரைத் தேர்வு செய்யலாம் என்ற விவாதத்தில் மிஷ்கின் எனது பெயரைக் கூறியிருக்கிறார். உடனே விக்ராந்த் என்னைத் தொடர்பு கொண்டு என்னை நடிக்க அழைத்தார். இயக்குநர் என் கதாபாத்திரத்தைக் கூறியதும் வழக்கமான பாத்திரமாக இல்லாததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதில் எனக்கு ஓடுவது மட்டுமே சவாலாக இருந்தது. இருப்பினும், இயக்குநர் சொல்வதை செய்ய வேண்டுமென்ற மனநிலையோடு சென்றதால் நடித்து முடித்தேன். முதல் பாதி படம் பார்த்த என் குடும்பத்தார்கள் நடிப்பதில் நான் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டேனோ என்று நினைத்தார்கள். ஆனால், இரண்டாவது பாதி பார்த்துவிட்டு  மகிழ்ச்சியடைந்தார்கள். எனக்கோ, எதுவொன்றைச் செய்தாலும்

இனி ஹீரோவாக நடிக்க மாட்டேன்…இயக்குனர் மிஷ்கின்

Directors
நந்தா பெரியசாமி இயக்கிய அழகன் அழகி படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அதில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டார். பாலாஜி சக்திவேல் எடுத்த காதல் படத்தை விட வழக்கு எண் 18/9 மிகவும் சிறப்பானது. பாலாஜி 2 ஆண்டுகளாக செதுக்கி செதுக்கி எடுத்த படத்தை தமிழக மக்கள் ஏன் கொண்டாடாமல் போனார்கள். அந்த படத்தை என்னிடம் கொடுத்திருந்தால் ஒரு பெண்ணுக்கு மஞ்சள் நிற புடவை கொடுத்து ‘வாலமீனு வெளாங்கு மீனு’ என்று பாடச் சொல்லி ஹிட்டாக்கியிருப்பேன். ஆனால் பாலாஜியின் கண்ணியமான படத்திற்கு அங்கீகாரம் இல்லை. அப்ப எப்படித் தான் படம் எடுக்க வேண்டும்?. கையெடுத்து கும்பிடுகிறேன் திரைத்துறையில் 2,3 காந்திகள் தான் உள்ளனர். அவர்களையும் சுட்டு விடாதீர்கள். அவர்கள் மறைவிற்கு பிறகு பாராட்டியோ, சிலை வைத்தோ புண்ணியம் இல்லை. இனி நான் ஹீரோவாக நடிக்க மாட்டேன். எனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என்றார்.