News

ஜிப்ஸிக்காக ஒன்றுகூடிய சமூகநீதிப் போராளிகள்!!

ஜிப்ஸிக்காக ஒன்றுகூடிய சமூகநீதிப் போராளிகள்!!

News
ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘ஜிப்ஸி'..  குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ஸி படத்தின் படபிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் இப்படத்திற்கான பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒடுக்கு முறைக்கு ஆளாகும் எளிய மனிதர்களின்  குரலாகவும், களப்போராளிகளின் குரலாகவும்,‘ வெரி வெரி பேட் ..‘ எனத் தொடங்கும் பாடல் ஒன்றை யுகபாரதி எழுதியிருக்கிறார். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த பாடலுக்கான ப்ரமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் படமாக்கத் திட்டமிட்டபோது, தமிழ் சமூகத்தில் உண்மையாகவே களத்தில் போராடும் போராளிகள் இந்த பாடல் காட்சியில் இடம்பெற்றால் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று எண்ணினார்கள். அத
எட்டு வருட போராட்டத்திற்கு கிடைத்த பரிசு ‘தோனி கபடி குழு’ : விஜித் சரவணன் மகிழ்ச்சி!

எட்டு வருட போராட்டத்திற்கு கிடைத்த பரிசு ‘தோனி கபடி குழு’ : விஜித் சரவணன் மகிழ்ச்சி!

News
  நந்தகுமார் தயாரித்து, ஐயப்பன் இயக்கிய 'தோனி கபடி குழு' படத்தில் வில்லனாக நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை இயக்குநர் ஐயப்பன்,  நந்தகுமார் கொடுத்தார்கள்.    இந்தப்  படத்தில் நான்  முதன்மை வில்லனாக கதாபாத்திரமேற்று நடிக்கிறேன். அதற்கு,  இயக்குநர் ஐயப்பன் , தயாரிப்பாளர் நந்தகுமாருக்கு நன்றி. இதற்கு முன் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.   மேலும், 'வேட்டை நாய்' படத்திலும்  நடிக்கிறேன். இப்படத்தில் R.K.சுரேஷ் கதாநாயகனாகவும், ராம்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.   இப்படத்தை 'மன்னாரு' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜெய்சங்கர் இயக்குகிறார். இந்தப்  படத்தின் மூலம் வாய்ப்பு தந்திருக்கிறார் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.   மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளர் P.ஜோதிமுருகன், விஜய்
ரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையைக் கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’!!

ரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையைக் கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’!!

News
  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’.    இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை  பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது.    இதற்கு முன் இந்நிறுவனம் ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’, ‘திமிரு பிடிச்சவன்’,     ’மொட்ட சிவா கெட்ட சிவா’, ’வி ஐ பி 2’, ’துப்பாக்கிமுனை’ உள்ளிட்ட படங்களையும் இந்நிறுவனம் உலக நாடுகளில் வெளியிட்டது.   மேலும், விரைவில் திரைக்கு வரவுள்ள ’அடங்கமறு’ படத்தினையும் இந்நிறுவனமே வெளியிடவுள்ளது.   வெளிநாடு வெளியீடு உரிமையை பெற்ற மலேசிய மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் வரும் 2019 ஜனவரி பொங்கல் திருநாளில் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்தின் உரிமையை (இந்தியா தவிர்த்து) பெற்றுள்
மஜீத் இயக்கும் படம் ‘தி புரோக்கர்’  பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

மஜீத் இயக்கும் படம் ‘தி புரோக்கர்’  பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

News
'தமிழன் ',' பைசா ', 'டார்ச் லைட் 'படங்களுக்குப் பின் இயக்குநர் மஜீத் இயக்கும்  படம் 'தி புரோக்கர்' . இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது! நாயகனாக விமல், யோகி பாபு, 'அண்ணாதுரை 'பட நாயகி டயானா சாம்பிகா, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, வினோத் , தம்பி ராமையா, மயில்சாமி, மற்றும் காமெடி நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள். இது திருமணத்துக்குப்  பெண் பார்க்கும் தரகர் சம்பந்தப்பட்ட கதை. திருமணம் சார்ந்த பின்னணியில் படம்  உருவாவதால் கலகலப்புக்கும் விறு விறுப்புக்கும் படத்தில் பஞ்சமில்லை. நட்சத்திரப் பட்டாளங்கள் படம் முழுக்க காமெடி திருவிழாவாக இருக்கும்.  கான்பிடன்ட் பிலிம் கேஃப்  சார்பில் படம் உருவாகிறது.  பூஜையுடன் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நாம் தமிழர் கட்சி பெரியார் போன்ற பெருந்தகைகளை வழிகாட்டியாக ஏற்கிறது- சீமான்

நாம் தமிழர் கட்சி பெரியார் போன்ற பெருந்தகைகளை வழிகாட்டியாக ஏற்கிறது- சீமான்

News
பெண்ணிய உரிமை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு உள்ளிட்ட களங்களில் சற்றும் சமரசமின்றிப் போராடிய கலகக்காரர் ஐயா பெரியார். அவரின் 45ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று 24-12-2018 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி, தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்று மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினர். செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது, https://www.youtube.com/watch?v=2PsogTumC7A சாதியை ஒழித்து சமநிலை சமூகத்தைப் படைக்கிற களத்திலும், பெண்ணிய உரிமைப் போராட்டக் களத்திலும் அரும்பாடாற்
 எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு அரசு மரியாதை! – புதுச்சேரி அரசுக்கு சீமான் பாராட்டு

 எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு அரசு மரியாதை! – புதுச்சேரி அரசுக்கு சீமான் பாராட்டு

News
எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தியதற்காக புதுச்சேரி அரசுக்குப் பாராட்டு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், தமிழ் இலக்கிய ஆளுமையுமான மதிப்பிற்குரிய ஐயா பிரபஞ்சன் அவர்களின் உடலுக்கு புதுச்சேரி அரசாங்கம் முழு அரசு மரியாதை செலுத்தியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை நாம் தமிழர் கட்சி பெரிதும் பாராட்டுகிறது.  எழுத்துலக மேதைகளைப் பாராட்டுகிற இந்த மரபு தொடரவேண்டும். பிரதமர், முதலமைச்சர், அரசு அதிகாரங்களில் இருப்பவர்கள், அரசு அதிகாரிகள், அரசப் பதவியில் இருந்தவர்களுக்குத்தான் அரசு மரியாதை என்கிற மரபை மீறி இலக்கியம் போன்ற துறைகளில் புகழ்பெற்றவர்களுக்கும் மதிப்பளிக்கவேண்டும் என்கிற முறையைப் புதுச்சே
இள வயதினரைக் கவர தேவ்வில் ஆறு நிமிட பாடல்?

இள வயதினரைக் கவர தேவ்வில் ஆறு நிமிட பாடல்?

News
  கார்த்தி – ரகுல் ப்ரித் சிங் நடிக்கும் ‘தேவ்’ படத்தின்  ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.   இந்நிலையில், இன்று ‘ஹாரிஸ் ஜெயராஜ்’ இசை மழையில்   ‘அனங்கே’ என்று தொடங்கும் முதல் ஆடியோ பாடல் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது.    தாமரையால் எழுதப்பட்ட பாடல் வரிகள் இளசுகளை கவரும் வகையில் உள்ளது.   ஹரிஹரன், பரத் சுந்தர், திப்பு, க்ரிஷ், கிறிஸ்டோபர், அர்ஜுன் சாண்டி மற்றும் சரண்யா கோபிநாத் ஆகியோர் பாடியுள்ளனர்.   இப்பாடல் காட்சி சுமார் 6 நிமிட நேரம் கொண்ட பாடலாக உருவாகி வரும் இப்பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைக்கும், மற்றும் இக்காலகட்டத்தின் ரசிகர்களுக்கேற்ற வகையில் இருக்கும்.   ‘தேவ்’ படம் ஆக்ஷன், வீரம், காதல் அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். நாயகன், நாயகியாக கார்த்தியும், ரகுல் ப்ரித் சிங்கும் நடிக்கிறார்கள். &nbs
பெயர் தெரியாத காதலனைத் தேடும் ஹீரோயின்!

பெயர் தெரியாத காதலனைத் தேடும் ஹீரோயின்!

News
  பெருவக்காரன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரொமாண்டிக் காதல் படமாக தமிழில் உருவாகி வரும் படம் ‘ அமையா’..   நிகில் வி.கமல் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் சுஜா சூர்யநிலா என்பவர் டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்..   இவர் 2௦16ல் மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாஸ்டர் மகேந்திரன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.   இந்தப்படத்திற்கு S.கௌதம் இசையமைக்க, பாடல்களை இயக்குநர் நிகில்  வி.கமலே எழுதியுள்ளார்.   ஹரிஹரீஷ் மற்றும் ஷின்டோ P.ஜார்ஜ் இருவரும் இணைந்து ஒளிப்பதிவை கவனிக்க, ராஜேஷ் ஹரிஹரன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.   முகவரி, பெயர்  என எந்த விவரமும் தெரியாமல் தனது காதலனை தேடும் ஒரு கர்ப்பிணி பெண்ணின் கதை தான் இந்தப்படத்தின் மையக்கரு.    அமையா  த
கோக்கோமாக்கோன்னா கோயம்புத்தூர் குசும்பாம்!!…

கோக்கோமாக்கோன்னா கோயம்புத்தூர் குசும்பாம்!!…

News
கோகோ மாக்கோ,   இசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் படம்.    காதலர் தினத்தை ஒட்டிய ஒரு பயண அனுபவத்தைத் தரும் படமாக Crazy Musical Romantic Road Trip Comedy இருக்கும் என்கிறார்  இயக்குநர் அருண்காந்த் .    இவர் யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியிருக்கவில்லை என்கிற போதிலும்,    எழுத்து -இயக்கத்துடன்  இசை, இசை சேர்ப்பு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு, நிறச்சேர்ப்பு ஆகிய பணிகளையும் செய்திருக்கிறார்.    நாயகனாக சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் நடிக்கிறார். இவர்  துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய படங்களில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   நாயகியாக புதுமுகம் தனுஷாவுடன் தரமணி படத்தில் ஆண்ட் ரியாவுடன் நடித்த சாரா ஜார்ஜும் நடிக்க,   இவர்களுடன் சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரா, டெல்லி கணேஷ், அஜய் ரத்னம், 
கார்த்தி படத்தில் கதாநாயகி இல்லையா??

கார்த்தி படத்தில் கதாநாயகி இல்லையா??

News
கார்த்தி நடிக்கும் புதிய படத்தை 'மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ‘கார்த்தி 18’ என்று பெயரிடப்பட்டுள்ளனர். தற்போது கார்த்தியின் நடிப்பில்உருவாகியுள்ள ‘தேவ்’ படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கடைக்குட்டி சிங்கம்’ எனஅடுத்தடுத்து மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் நாயகன் கார்த்தியுடன் இணைந்து கைகோர்க்க வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் என ‘மாநகரம்’ படம் மூலம் அனைவராலும் பாராட்டுப் பெற்ற இவர் இயக்கும் இரண்டாவது படம் இது. கதாநாயகி இல்லாத இப்படத்தில் நரேன் (அஞ்சாதே), ரமணா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க, மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் படமாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகிறது. படத்தில் 70 சதவிகிதம் ஆக்ஷனுக்கு ம