News

3டி தொழில்நுட்பத்தில் “நான்காம் பிறை”

3டி தொழில்நுட்பத்தில் “நான்காம் பிறை”

News
இயக்குனர் வினயன் "நான்காம் பிறை" என்னும் புதிய படத்தை இயக்குகிறார். ஒவ்வொரு பிரேமிலும் 3டி எபெக்ட்டுடன் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பான திரைக்கதையுடன் ஒரு திரைப்படம் உருவாகிறது. அதற்கு "நான்காம் பிறை" என பெயரிட்டுள்ளனர். உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியர் பிராம் ஸ்டோகர் எழுதிய டிராகுலா நாவல் கதையை மையமாக கொண்ட இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது. இந்த படத்தில் புகழ் பெற்ற ஹாலிவூட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். 3டி படமான இதில் பிரபு,நாசர்,திலகன்,கஞ்சா கருப்பு, மனோபாலா நடிக்கின்றனர். புதுமுகம் ஆர்யன் நாயகனாகவும் சுதிர் டிராகுலா வேடத்திலும் நடிக்கின்றனர். மோனால் கஜ்ஜார், ஸ்றத்தா தாஸ், பிரியா மற்றும் ஸ்வேதா, பாபுபிரசாத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு ருமேனியா நாட்டில் உள்ள டிராகுலா மாளிகை பிரேன் கேஸ்டல் டிரான்சில்வேனியாவில் துவங்கி சென்னை ஹைதராபாத்,
வரிவிலக்குக்காக தாமே களத்தில் இறங்கிய நடிகை

வரிவிலக்குக்காக தாமே களத்தில் இறங்கிய நடிகை

News
ஆரோகணம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்தப் படத்துக்கு வரிவிலக்கு சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்த லட்சுமிக்கு, சான்றிதழ் கிடைக்க லேட்டானதால், தாமே களத்தில் இறங்கி விசாரித்தாராம். அந்த அனுபவத்தை அவர் இப்படிப் பகிர்ந்து கொண்டார்: "என் படத்தைப் பார்த்த அத்தனைப் பேரும் என்னை ரொம்ப பாராட்டிட்டாங்க. தரமான படம்னு சான்றிதழ் கொடுத்திருக்காங்க. அந்த மனநிறைவோடு நான், வரிவிலக்குச் சான்றிதழை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். 3 வாரங்கள் ஆகியும் அரசுத் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வராமல் போகவே, என்னைக் கவலை அரிக்க ஆரம்பித்தது. அந்த அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெறவேண்டுமானால், அவர்களைக் ‘கவனித்தால்'தான் வேலை நடக்கும் என்பது போன்ற வதந்திகளும் எச்சரிக்கைகளும் என் கவலையை இன்னும் அதிகரிக்கச் செய்தன. ஏற்கெனவே பார்த்துப் பார்த்து சிக்கனமாய் நான் போட்டிருந்த பட்ஜெட்டில்
பாடகர் கார்த்திக் தெலுங்கில் இசையமைப்பாளரானார்..

பாடகர் கார்த்திக் தெலுங்கில் இசையமைப்பாளரானார்..

News
பாடகர் கார்த்திக் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானிடம் ஸ்டார் படத்திற்காக முதல் முறையாக நேர்ந்துகிட்டேன் என்ற பாடலைப் பாடினார். இவர் பாடகர் ஸ்ரீனிவாசின் சொந்தக்காரர். ஸ்ரீனிவாசின் மூலமாக ரகுமானுக்கு அறிமுகமானவர் இன்று நிறைய படங்களுக்கு பாடி வருகிறார். தமிழில் அரவான் படத்திற்கு இசையமைத்த கார்த்திக் இவர் தெலுங்கில் வெளிவரும் ஒரு படத்திற்காக இசையமைக்க முதல் முறையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். நித்யாமேனன்- மற்றும் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்திலிருந்து புதிதாக அறிமுகமாகும் ஹீரோ நடிக்கும் அப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் கார்த்திக்.தவிர, தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்திற்கும் இசையமைக்கிறார்.
புலிகளை காப்பாற்ற விரும்பும் சினேகா

புலிகளை காப்பாற்ற விரும்பும் சினேகா

News
தமிழ் நாட்டு சினேகா இல்லீங்க.. இது வடநாட்டு சினேகா உல்லால். வானம் படத்துல நடிச்சவுங்க. அதேமாதிரி புலிகளைத்தான் மீண்டும் கலுவேற்றிட்டாங்களே இந்தியாவில் .. இந்தம்மா மட்டும் அவங்களுக்கு என்ன செய்யப்போவுதாம்னு நீங்க நினைக்கலாம். இவங்க சொன்னது, இறையாண்மைக்கு எதிராக இயங்குவதாக இந்தியா இன்று அறிவித்துள்ள தமிழ் புலிகளை இல்லை.. காட்டில் வாழும் புலிகளை.. அதாவது அழிந்துகொண்டு வரும் தேசிய விலங்கான புலிகளை காக்க வேண்டும். அதற்கு என்னாலான உதவியை செய்யத் தயார் என்று அறிவித்துள்ளார்.
நடனப் பள்ளி வைத்து டார்ச்சர் -நடிகை ஷோபனா மீது மக்கள் புகார்

நடனப் பள்ளி வைத்து டார்ச்சர் -நடிகை ஷோபனா மீது மக்கள் புகார்

News
நடிகையும், பரத நாட்டியக் கலைஞருமான ஷோபனா மீது, அவர் வசிக்கும் தெருவில் உள்ள மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நேற்று ஷோபனா, காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, இன்று அவர் வசிக்கும் மக்கள் ஷோபனாவைப் பற்றிப் புகார் தெரிவித்துள்ளார்கள் . சென்னை ஆழ்வார் பேட்டையில் ஸ்ரீமான் ஸ்ரீனிவாச தெருவில் வசிக்கிறார், நடிகை ஷோபனா. இவர் அங்கு நடனப் பள்ளி நடத்தி வருகிறார். அந்த தெருவில் உணவுக் கடை வைத்திருக்கும் நபர் தனது மாணவிகளிடம் தவறாக பேசிவருகிறார் என்று புகார் மனு மாநகர் காவல் ஆணையரிடம் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில், உணவுக் கடை வைத்திருந்தவரை காலிசெய்ய வைத்துவிட்டனர் காவல் துறையினர். ஆனால், அந்த தெருவாசிகள், ஷோபனாதான் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு நடனப் பள்ளி அமைத்துக் கொண்டு அனைவருக்கும் குடைச்சல் கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளனர். அதோடு, உணவுக் கட
கமலுக்கு என்ன மரியாதை?

கமலுக்கு என்ன மரியாதை?

News
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் ஆடியோ வெளியீடு என்று இன்று காலையில் ஒரு மூட்டை படங்கள் இண்டர்நெட்டை ஆக்கிரமித்துக்கொண்டது. காரணம் அந்த படத்தின் ஆடியோவை வெளியிட்டிருந்தவர் உலக நாயகன் கமல். மாலை அதே படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்று சொல்லப்பட்டது. ஆனால் அங்கே இயக்குனர்கள். சுசீந்திரன், பன்னீர் செல்வம், புஷ்கர், கௌரவ், அறிவழகன் என ஒரு கூட்டம் சேர்ந்து பிரசாத் லேபில் வைத்து மீண்டும் "ந கொ ப கா" படத்தின் ஆடியோவை வெளியிட்டார்கள். அதாவது ஆடியோ வெளியீடு பார்ட் டூ வாக வெளியிடப்பட்டது. அப்போ காலையில் வெளியிட்ட கமலுக்கு என்ன மரியாதை? என்பதே விழாவிற்கு சென்ற பலரின் கேள்வியாக இருந்தது.
வில்லி வேடம் கொடுத்துப் பாருங்கள்!’- சவால்விடும் ரம்யா

வில்லி வேடம் கொடுத்துப் பாருங்கள்!’- சவால்விடும் ரம்யா

News
ரம்யா! சமீபத்தில் வெளிவந்த ‘தடையற தாக்க’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கதாநாயகிகளுக்கு அக்கா, தோழி, கதாநாயகர்களுக்கு அண்ணி, அக்கா வேடங்களுக்கு மிகவும் பொருத்தமானவர் ரம்யா. இவ்வளவு அழகாகவும், இளமையாகவும் இருக்கிறீர்களே? ஏன்? கதாநாயகியாக நடிக்க முயற்சிக்க கூடாது என ரம்யாவிடம் கேட்டபோது.. “சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஏகப்பட்ட போட்டிகள் இருக்கிறது. அப்படியே ஒரு படத்தில் அறிமுகமானாலும் அந்த வாய்ப்பை தொடர்ந்து தக்க வைத்துகொள்வதற்கு சாமர்த்தியத்தைவிட, அதிர்ஷ்டமும் அவசியம் வேண்டும். என்னை பொறுத்தவரை எனக்கு கேரக்டர் ரோல் கிடைத்தால் அதிலேயே என் திறமையை காட்டுவேன் என்று பிராக்டிக்கலாக பேசுகிறார் இந்த க்யூட் நடிகை. எப்படி நடிக்க வந்தீர்கள்? நான் எம்.ஏ. பப்ளிகேஷன்ஸ் படித்துள்ளேன். மாடலிங் துறையில் எனக்கு ஆர்வம் அதிகம். அங்கியிருந்து அப்படியே சின்னத்திரைக்குள் எண்ட்ரியானேன்.
சூரிக்கு கார்  ஓட்டி ஓகே சொன்ன நடிகர் விஜய் ..

சூரிக்கு கார் ஓட்டி ஓகே சொன்ன நடிகர் விஜய் ..

News
வெண்ணிலா கபடிகுழு படத்தில் நடித்த சூரி சமீபத்தில் ஒரு கார் வாங்கியுள்ளார். வேலாயுதம் படத்தில் நடித்தபோது நடிகர் விஜயும் சூரியும் நண்பர்களாகினர். தான் கார் வாங்கப்போகும் செய்தியை விஜயிடம் சொல்ல அழைத்தார். ஆனால் விஜய் காரைப் பார்க்க நேரில் வந்ததோடு அந்த காரை ஓட்டிப் பார்த்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு ஓகே சொன்னபிறகே காரை வாங்கினார் சூரி. தவிர விஜய் சூரிக்கு வாழ்த்து சொன்னதோடு கார் வாங்க பண உதவியும் செய்துள்ளார். இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் கட்டளை போட்டுள்ளார். ஆனால் சூரி வாய்தான் சும்மா இருக்காதே இப்படியொரு விஷயம் அடக்கி வைக்கமுடியாமல் புகழ்ந்து தள்ள நம்ம காதுக்கும் செய்தி வந்துவிட்டது. படிக்கிற நீங்களும் யாருக்கும் சொல்லாதீக..
திருப்பதி சென்ற அஜீத்… ஏன்? உண்மையான காரணம்…

திருப்பதி சென்ற அஜீத்… ஏன்? உண்மையான காரணம்…

News
அஜீத் திருப்பதி சென்றதும் பில்லாவின் வெற்றிக்காக ரஜினி பாணியில் இறங்கிவிட்டார் என்று செய்திகள். ஆனால் அஜீத் வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருப்பதி செல்லும் பழக்கமுள்ளவர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பும் சென்றிருந்தார். திருப்பதி தவிர பாலக்காட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலுக்கும் செல்வது அவரின் வழக்கம். இம்முறை அவரது மனைவி மற்றும் குடும்பத்தின் விருப்பத்திற்கிணங்க சென்று வந்துள்ளார். நாகூர் தர்காவும், வேளாங்கண்ணிக்கும் அடிக்கடி சென்று வந்துள்ள அவர் இப்போது அங்கு அழைத்துச் செல்ல சரியான ஆட்கள் இல்லாததால் போகாமல் இருக்கிறார்.
நடிகை டாப்சீக்காக அடித்துக்கொண்ட நடிகர்கள்…

நடிகை டாப்சீக்காக அடித்துக்கொண்ட நடிகர்கள்…

News
மகத், மங்காத்தா படத்தில் நடித்துள்ளார். மனோஜ் மஞ்சு தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன். தமிழில் வருவான் தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மகத்துக்கும், டாப்சிக்கும் ஏற்கனவே நெருக்கம் இருந்தது. படப்பிடிப்புக்காக டாப்சி சென்னை வரும்போதெல்லாம் மகத் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காருடன் காத்து நின்று அழைத்து வருவது வழக்கம். இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. தற்போது இவர்கள் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் மனோஜ் மஞ்சு என்று கூறப்படுகிறது. மனோஜும், டாப்சியை காதலிக்கிறார். ஐதராபாத்தில் இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருப்பதாக செய்திகள் வெளியாயின. விழாக்களுக்கும் சேர்ந்தே போகிறார்கள். டாப்சியை தன்னிடம் இருந்து அபகரித்து கொண்டதாக மனோஜ் மீது மகத் ஆத்திரத்தில் இருந்தார். இதனால் அவர்களுக்குள் பனிப்போர் நிலவியது. இந்த கோபம் ஒட்டல் விருந்தில் வெடித்தது. கடந்த சனிக்கிழ