Reviews

சென்னையில் ஒரு நாள்-விமர்சனம்

சென்னையில் ஒரு நாள்-விமர்சனம்

Reviews
சென்னையில் ஒரு நாள்.. தெரியாமல் நடந்து போன விபத்தில் மரணமடையும் ஒரு இளைஞனின் இதயம் சென்னையிலிருந்து ஏன்? எதற்கு? எப்படி வேலூர் சென்றடைகிறது என்பதை சொல்லியிருக்கும் படம் - சென்னையில் ஒரு நாள்.. அப்பா, அம்மா, காதலி, காதலன் இவர்கள் ஒருபக்கம் , வேலையில் கெட்டபெயர் வாங்கிய ஒரு போக்குவரத்து காவலர்  மறுபக்கம் , மனைவியை துரத்தி துரத்தி காதலிக்கும் கணவன் அவனுக்கு துரோகம் செய்யும் மனைவி- தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் அவரது பாசமிக்க மகள், மனைவி என நான்கு பாகமாக கிளைகட்டி நிற்கும் திரைக்கதை. எப்படி அந்த திரைக்கதை 'ஒன்றே ஒன்றாக' ஒன்று சேர்கிறது என்பது முன் நிற்கும் பெரிய சவால். யூகிக்க முடியாத பரபரப்புடன் நகரத் தொடங்குகிறது படம். ஆரம்பத்தில் இந்த நகர்வுகளை இணைப்பதற்குள் சற்றே நெளிய நேர்ந்தாலும், பின் சுதாரித்துக் கொண்டு வேகமெடுக்கிறது கதை. சொல்லவேண்டிய விஷயம் சற
மாற்றான்- விமர்சனம்  -உள்ளது உள்ளபடி

மாற்றான்- விமர்சனம் -உள்ளது உள்ளபடி

Reviews
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் காதல், பிரிவு என பயணப்படும் கதையில் முதல் பாதி வெகு அழகு. ஆனால் அதன் பின், பின் வைத்து காதுல தலையிலன்னு பூ சுத்தும் கே வி ஆனந்தின் கதையாற்றல் நமக்கு கொஞ்சம் தலை சுற்றலை வரவைத்து விடுகிறது. ஆனால் படம் முழுக்க நம்மை ஆச்சர்யப்பட வைப்பவர் சூர்யா. சமீபத்தில் வெற்றிக்கு நான்தான் காரணம்னு எந்த ஹீரோவாவது சொன்னா மண்டையில தட்டணும்னு சொன்ன கே வி ஆனந்தின் வார்த்தையை பல்லிளிக்க வைத்திருக்கிறார். சூர்யா இல்லன்னா மாற்றான் கண்டிப்பா தோற்றான் ஆகியிருக்கும். பத்தாவது மாடியிலிருந்து விழுந்து நொறுங்கப்போகும் ஒரு கண்ணாடி பொருளை கடைசி மாடியில் நின்று பிடித்து உடையாமல் காப்பாற்றி நிற்பது சூர்யா.. சூர்யா மட்டுமே. அபார உழைப்பு.. கதையை இரண்டாம் பாதி நகர்த்த தான் எடுத்த அயன், கோ படங்களை காப்பி அடிக்க ஆரம்பித்துவிட்டார் கே.வி. ஆனால் இரண்டு சூர்யாவை வைத்து எங்கேயும் லாஜிக்
சாட்டை- விமர்சனம்

சாட்டை- விமர்சனம்

Reviews
சாட்டை - அரசு பள்ளிகளில் இருக்கும் தவறான ஒரு சில ஆசிரியர்களுக்கு எதிராக சுழற்றுகிறது சாட்டையை. சாட்டை- எப்பவாவது பூக்கும் குறிஞ்சிப்பூ. சாட்டை- தமிழ் சினிமாவில் கௌரவிக்கப்பட வேண்டிய படம். பாருங்கள்... இப்படிப்பட்ட படங்களை பார்த்து திருந்துங்கள்.
பாகன் விமர்சனம்

பாகன் விமர்சனம்

Reviews
கிலிங்... கிலிங்... நான் தான் சைக்கிள் பேசுகிறேன்.பாகன் படத்தில் நான் முக்கிய வேடத்தில் வருகிறேன். என்னோட முக்கியத்துவத்தை பலரும் மறந்து வரும் காலத்தில் இயக்குனர் அஸ்லாம் தனது முதல் படத்திலேயே என்னை பிரதான பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். அவருக்கு முதல்ல எனது நன்றி! படத்தில நான் தான் ஹீரோனு கூட சொல்லலாம்! இல்லை இல்லை ஸ்ரீகாந்த்தான் ஹீரோ. சுப்பிரமணியாக வரும் அவருக்கு சின்ன வயதில் இருந்து என் மீது அப்படி ஒரு கிரேஸ். இல்லை காதல்! என் மீது அமர்ந்தபடி சுற்றி திரிவதில் அவ்வளவு ஈடுபாடு. வளர்ந்து வாலிபனான பிறகும் சுப்பிரமணிக்கு என் மீதான ஈடுபாடு மாறவேயில்லை.அவரோட காதலுக்கும் நான் தான் துணை நிற்கிறேன். அந்த வகையில் அவருடன் இருக்கும் இரண்டு உயிர் நண்பர்களோடு என்னையும் சேர்த்து கொள்ளலாம். சுப்பிரமணியோட காதல் இருக்கே,அது ரொம்ப சுவாரஸ்யமானதுங்க! குறுக்கு வழியில் முன்னேறனும்னு துடிக
பில்லா 2 -விமர்சனம்

பில்லா 2 -விமர்சனம்

Reviews
. ஒரு படத்தைப் பற்றி விமர்சித்து அதனால் நாலு பேர் தியேட்டருக்கு வராம போவாங்கன்னா அந்த விமர்சனத்தால எந்த பயனும் இல்ல .. சினிமாவுல வாழ்க்கை நடத்துவதால் அந்த சினிமாவுக்கு எந்த கெடுதலும் என் எழுத்து செய்யாமல் இருக்கும் பொருட்டு இந்த விமர்சனத்தை எனக்குள்ளே எழுதிக்கொள்கிறேன் பில்லா 2 - கதைக்காக இன்னும் நேரத்தை செலவிடுங்கள்
நான் ஈ விமர்சனம்

நான் ஈ விமர்சனம்

Reviews
நான் ஈ.. இந்த படத்திற்கெல்லாம் விமர்சனம் எழுதும் தகுதி இருக்கிறதா என்ற கேள்வியை எனக்கு நானே முதலில் எழுப்பிக்கொண்டேன். 'இல்லை' ஒரு சதவீதம் கூட இல்லை என்ற பதில் உடனடியாக வந்தது. இருந்தும் ஏன் எழுதுகிறேன் என்ற கேள்விக்கு இதுதான் எனது பதில். நான் எழுதும் தகுதி இல்லையென்று சும்மா இருந்துவிட்டால் ஒரு நல்ல படத்தை உங்களுக்கு அடையாளம் காட்ட முடியாமல் போன துரோகம் எனக்கு வந்து சேரும். முதலாவது இதன் இயக்குனர் ராஜ மௌலிக்கு ஒரு ராயல் சல்யூட். என்ன மனுஷன்யா? திரையில் ஒரு நூல் கட்டி அதன் மேல் நடக்கும் வித்தையை அப்படியொரு லாவகமான தனக்கே உரிய தில்லான நடையில் கொஞ்சி விளையாடியிருக்கிறார். ஒரு சூப்பர் ஸ்டாரை (சுதீப்) வில்லனாக்கி விட்டவர், அடுத்து ஹீரோவாக அவரைவிட ஒருபடி கூடுதலான இன்னொரு சூப்பர் ஸ்டாரை நடிக்க வைத்திருக்கவேண்டுமல்லவா? ஒரு ஈயை சூப்பர் ஸ்டாராக்கி ஒரு படம் ஹிட்டாக வேறெதுவும் தேவையில்லை. இந்
சகுனி விமர்சனம்

சகுனி விமர்சனம்

Reviews
அரசியலை மையமாக வைத்து சடையர் வந்து நாட்களாகிவிட்டன. அப்படியே வந்தாலும் அவற்றில் பிரச்சார நெடி இருக்கும். ஆனால் கார்த்தி நடிப்பில் வந்துள்ள சகுனி, அந்தக் குறையைத் தீர்த்துவைத்துள்ளது. அரசியலை விமர்சித்த மாதிரியும் ஆயிற்று... பொழுதுபோக்குக்கு பொழுதுபோக்குமாயிற்று! கதை ரொம்ப சிம்பிள். லாஜிக் கூட ஒப்புக் கொள்ளக்கூடியதுதான்... நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி இருந்தாலும், இப்படியெல்லாம் நடந்தாகூட நல்லாதான் இருக்கும் என்றே தோன்றுகிறது. காரைக்குடியில் உள்ள கார்த்தியின் ஒரே சொத்து, ஒரு பூர்வீக வீடு. அதையும் ரயில்வே திட்டத்துக்காக இடிக்கப் பார்க்கிறது அரசு. இந்த வீட்டை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை வரும் கார்த்தி, அமைச்சரிடம் மனு கொடுக்க, அது வழக்கம்போல 'போக வேண்டிய' இடத்துக்குப் போகிறது! முதலமைச்சரிடம் போனால் நியாயம் கிடைக்கும் என்று போகிறார்... அங்கே உருவா
வழக்கு எண் 18/9 -விமர்சனம்

வழக்கு எண் 18/9 -விமர்சனம்

Reviews
சம்பிரதாயமான ஒரு பாராட்டை முன்னுரையாகத் தருவது கூட, இந்தப் படைப்பின் இயல்புக்கு விரோதமாகிவிடுமோ என யோசிக்க வைக்கும் அளவு ஒரு நேர்மையான படம் வழக்கு எண் 18/9. தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தப் போகிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்காமல், சத்தமின்றி அந்த வேலையைச் செய்யும் மிகச் சில படைப்பாளிகளுள் ஒருவர் பாலாஜி சக்திவேல். படங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதில் நம்பிக்கையில்லாத, ஜீவனுள்ள படைப்புகளைத் தருவதை மட்டுமே பிரதானமாகக் கொண்ட இயக்குநர். தனது முந்தைய காதல், கல்லூரி படங்களை விட பல மடங்கு உயர்வான ஒரு படைப்பை தமிழ் ரசிகர்கள் கண்முன் வைத்திருக்கிறார். காதலும் அந்த உணர்வும் எல்லாவுயிர்க்கும் பொதுவானது. அந்தஸ்துகளுக்கு அப்பால் உயர்ந்து நிற்பது என்பதையும், சட்டம் ஏழைகளுக்கு எப்படி எட்டாத உயரத்தில் நிற்கிறது என்ற பேருண்மையை வெகு எளிதாகவும் சொல்லியிருக்கிறார். கதையின் மு