Reviews

இவன் தந்திரன் – விமர்சனம்

இவன் தந்திரன் – விமர்சனம்

Reviews
  Rating - 3/5 மசாலா படங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் ஆர் கண்ணன். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘இவன் தந்திரன்’. கெளதம் கார்த்திக் மற்றும் ஆர் ஜே பாலாஜியின் நடிப்பில் மிக வித்தியாசமான கதைகளத்தோடு இன்று வெளிவந்திருக்கிறது. தந்திரமாக தப்பித்தானா, இல்லையா என்பதை விமர்சனம் மூலம் காணலாம். இயக்குனர்களுக்கு கதை எதுவும் கிடைக்கவில்லை என்றால் சமுதாய பிரச்சனைகளில் எதாவது ஒன்றை கையில் எடுத்து வைத்து விடுவார்கள். அந்த சமுதாய பிரச்சனைகளிலும் மக்களுக்கு அவசியமான, அத்தியாவசியமான, தினமும் சந்திக்கும், தினம் தினம் போராடும் ஒரு பிரச்சனையை கையில் எடுத்து அதுவும் மாணவர்களின் கல்வி பிரச்சனையை கையில் எடுக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை கடந்து ‘இவன் தந்திரன்’ என்ற படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் கண்ணன். இந்த துணிச்சலுக்காகவே இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் பெரிய பாராட்டுக்களை தெர
வனமகன் – விமர்சனம்

வனமகன் – விமர்சனம்

Reviews
Rating 3.5/5 தொடர்ந்து நல்ல வெற்றி படங்களின் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜெயம் ரவி, போகன் படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய்யோடு இணைந்து உருவாக்கப்பட்ட படம் தான் இந்த ‘வனமகன்’. ஆரம்பத்தில் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் ரசிகர்களை சரியாக சென்றடைந்ததா இல்லையா என்பதை பார்த்து விடலாம். அந்தமான் பகுதியில் வாழ்ந்து வரும் ஒரு மழைவாழ் பழங்குடி இனத்தில் ஒருவராக வருகிறார் ஜெயம் ரவி. படத்தின் ஆரம்பத்திலே இந்த கூட்டத்தினர் சிலரை கொன்று ஜெயம் ரவியோடு பலரை கைது செய்கின்றனர் போலீசார். அதில் இருந்து ஜெயம் ரவி தப்பித்து விடுகிறார். அப்போது சென்னையில் அந்தமானிற்கு இருந்து சுற்றுலா வந்த நாயகி சாயிஷாவின் காரில் அடிபட்டு விடுகிறார் ஜெயம் ரவி. அவரை அங்கிருந்து அவசர சிகிச்சைக்காக சென்னை கொண்டு வருகிறார் சாயிஷா. சாயிஷா, தனது அப்பா இறந்ததும் அவரது நண்பர் பிரகாஷ் ராஜின்
அன்பானவன் அடங்காதவன் அசராதவன் – விமர்சனம்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் – விமர்சனம்

Reviews
த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற துடிப்பான கதையை (இளைஞர்களுக்கு மட்டும்) கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் சிம்புவோடு இணைந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தினை இயக்கியுள்ளார். இது சிம்புவிற்கான களமாக இருந்ததா என்பதை விமர்சனம் மூலம் காணலாம். 1980களில் மதுரையை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் மைக்கேல் (சிம்பு), பல கொலைகளை செய்து ரவுடியாக எண்ட்ரீ ஆகிறார். ஸ்ரேயாவை காதலிக்கும் சிம்பு, ஸ்ரேயாவிற்காக தனது ரவுடிதனத்தை விட்டுவிட்டு வாழலாம் என நினைக்கும் போது போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விடுகிறது. சிறையில் இருந்து தப்பித்து வரும் சிம்பு, ஸ்ரேயாவிற்கு வேறொருவருடன் திருமணம் ஆக போகிறது என தெரிந்ததும் துபாய் சென்று விடுகிறார் சிம்பு. மதுரை மைக்கேலாக இருந்த சிம்பு துபாய் சென்று மிகப்பெரிய டான்’ஆக வளர்கிறார். துபாய் போலீஸ் அவரை வலைவீசி தேட, சிம்புவோ சென்னையில் அஸ்வின் தாத்தா என்ற பெயரில் 55
உரு – விமர்சனம்

உரு – விமர்சனம்

Reviews
  Rating - 3/5   அறிமுக இயக்குனர் விக்கி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த ‘உரு’.    கதைப்படி, பிரபல எழுத்தாளராக வரும் கலையரசன், தற்போது இருக்கும் ட்ரெண்ட்க்கு ஏற்றவாறு கதை எழுதுவதற்காக அடர்ந்த மேகமலைக்கு செல்கிறார்.   அங்கிருக்கும் ஒரு வீட்டில் இருந்து கொண்டு கதை எழுத ஆரம்பிக்கிறார். தனியாக இருக்கும் அவரை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகிறது.    அதுவும் அவர் எழுதும் கதையில் என்ன இருக்கிறதோ அதுவே நடக்கிறது. ஒரு முகமூடி அணிந்த நபர் கலையரசனை கொல்ல முயற்சிக்கிறார். யார் அவர்..?? எதற்காக கலையரசனை கொல்ல முயற்சிக்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.    கலையரசன் தன்னுடைய படங்களில் கதைகளை தேர்வு செய்வதிலேயே வல்லவராக இருக்கிறார். அதே கண்கள், எய்தவனை தொடர்ந்து தற்போது இவர் நடித்திருக்கும் இந்த ‘உரு’வரை கதைகளை நன்றாகவே த
பீச்சாங்கை – விமர்சனம்

பீச்சாங்கை – விமர்சனம்

Reviews
  Rating 2.75/5  தமிழ் சினிமாவில் புது இயக்குனர்களின் வரவு அதிகம் என்றாலும் குறும்படங்களில் தங்களது திறமையை வெளிக்கொணர்ந்த பிறகு தான் பெரிய திரைக்கான வாய்ப்பு எட்டுகிறது. அப்படி, குறும்படங்களில் தனது திறமையை காட்டிய இயக்குனர் அசோக் இயக்கிய படம் தான் இந்த ‘பீச்சாங்கை’. நாயகன் கார்த்திக் ஒரு பிக் பாக்கெட். தனது பீச்சாங்கையால் அனைவரது பணத்தையும் ஈஸியாக பிக் பாக்கெட் அடித்து விடுவார். நாயகியாக வரும் அஞ்சலி ராவ்வை பார்க்கும் தருணத்தில் அவர் மீது காதல் வயப்படுகிறார் கார்த்திக். அஞ்சலி ராவ்வும் கார்த்திக் மேல் காதல் வயப்படுகிறார். சில நாட்களில் கார்த்திக் யார் என்பது அஞ்சலி ராவ்விற்கு தெரிய வர, கார்த்திக்கை போலீஸில் சிக்க வைக்கிறார் அஞ்சலி. போலீஸிடம் இருந்து தப்பித்து ஓடும் கார்த்திக் ஒரு விபத்தில் சிக்குகிறார். இந்த விபத்தில் அவரது வலது மூளையில் காயம் ஏற்பட்டு இவரது பீச
மரகத நாணயம் – விமர்சனம்

மரகத நாணயம் – விமர்சனம்

Reviews
  Rating - 3.5/5   சில புதுமுக இயக்குனர்களும் தங்களது திறமையை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்து அதில் வெற்றிபெறும் காலம் இது போல தோன்றுகிறது. அப்படி ஒரு புதுமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் இந்த ‘மரகத நாணயம்’. இந்த மரகத நாணயம் ஜொலித்ததா இல்லையா என்று பார்த்து விடலாம்.   ஹீரோவாக வரும் ஆதி தனது பணக்கஷ்டத்தால் சின்ன சின்ன கடத்தல் தொழிலில் இறங்குகிறார். மரகத நாணயம் பற்றி சில விஷயங்கள் கேள்விபட்ட வெளிநாட்டுக்காரர் ஒருவர் பல கோடி கொடுத்து அதை எடுக்க முயற்சிக்கிறார். அதற்காக மைம் கோபியை நாடுகிறார்.    மைம் கோபி மூலம் மரகத நாணயத்தை எடுக்கும் வேலை ஆதிக்கு வருகிறது. பல கோடி அளவிற்கு லாபம் கிடைக்கும் என்பதால் ஆதியும் ஓகே கூறுகிறார். மரகத நாணயத்தை தேடி போகும் போது தான் அதை பற்றிய பல உண்மைகள் வெளி வருகிறது. பல உயிர்கள் அதனால் காவு கொடுக்கப்பட்ட விஷயம
சத்ரியன் – விமர்சனம்

சத்ரியன் – விமர்சனம்

Reviews
வீர சிவாஜி படத்தின் சிறிது சறுக்கலுக்கு பிறகு நிச்சயம் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க ’சத்ரியன்’ படத்தை ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளார் விக்ரம் பிரபு. சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரனுடன் கைகோர்த்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் விக்ரம் பிரபு. அனைவரும் எதிர்பார்த்த ஒரு வெற்றியை இப்படம் கொடுத்ததா இல்லையா என்று பார்த்து விடலாம். திருச்சியில் மிகப்பெரிய தாதாவாக உயர்ந்து நிற்பவர் சமுத்திரம். படத்தின் ஆரம்பத்திலேயே அவரை மற்றொரு ரவுடி அருள்தாஸ் & டீம் கொலை செய்து விட திருச்சியை தன்னுடைய கண்ட்ரோலில் கொண்டு வருகிறார் அருள்தாஸ். சமுத்திரத்தின் வலதுகையாக வருகிறார் விஜயமுருகன். விஜயமுருகனின் விசுவாசியாக வருகிறார் விக்ரம் பிரபு. சமுத்திரத்தின் மகளாக வரும் மஞ்சிமா மோகனுக்கு கல்லூரி செல்லும் போது பாதுகாப்பாக விக்ரம் பிரபுவும் உடன் செல்கிறார். எப்
சரவணன் இருக்க பயமேன் – விமர்சனம்

சரவணன் இருக்க பயமேன் – விமர்சனம்

Reviews
’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற காமெடி படத்திற்கு பிறகு இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘சரவணன் இருக்க பயமேன்’. உதயநிதி நாயகனாக நடிக்க ரெஜினா நாயகியாக நடிக்க, வழக்கம்போல் வரும் காமெடி பட்டாளங்களும் நடிக்க இப்படம் உருவாகி உள்ளது. எழிலின் வெற்றிப்பயணம் இந்த படத்திலும் தொடர்ந்ததா என்பதை காணலாம். படித்து விட்டு ஊரை சுற்றும் இளைஞனாக வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இவரது மாமனாக வரும் சூரி வட மாநில கட்சியின் தமிழக பொறுப்பாளராக முயற்சிக்க, அவரை தந்திரமாக துபாய்க்கு அனுப்பி வைத்து அந்த கட்சியின் தமிழக தலைவராகிறார் உதயநிதி. சிறு வயதில் படிப்பிற்காக வெளியூர் சென்ற உதயநிதியின் மாமன் மகள் ரெஜினா சொந்த ஊருக்கு வருகிறார். சிறுவயதில் கீரியும் பாம்புமாக இருந்த உதயநிதியும் ரெஜினாவும், பருவத்தில் சந்தித்த போது உதயநிதி ரெஜினா மீது காதல் வயப்படுகிறார். ஆனால், ரெஜினாவோ அதே வீராப்புடன்
எய்தவன் – விமர்சனம்

எய்தவன் – விமர்சனம்

Reviews
Rating - 3/5 மெட்ராஸ் படத்தில் தனது தனித்துவமான நடிப்பினை நிரூபித்த கலையரசன், அதன் பிறகு அதே கண்கள் படத்தில் கண் தெரியாதவராக நடித்து அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார். இவர் நடிப்பில் தற்போது வித்தியாசமான கதைகளத்தோடு வெளிவர இருக்கிறது ‘எய்தவன்’. ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் தான் கலையரசனின் குடும்பம். தனது தங்கையை ஒரு அங்கீகாரம் பெறாத மருத்துவக் கல்லூரியில் அதிகமான பணம் செலுத்தி சேர்த்து விடுகிறார். சில தினங்களுக்கு பிறகு தான் தெரிகிறது அந்த கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைக்காது என்று. இதனால் கலையரசன், தான் செலுத்திய பணத்தை திரும்ப கேட்கும் போது கல்லூரி நிர்வாகத்தின் எதிர்ப்பை சம்பாத்தித்துக் கொள்கிறார். விளைவு, தனது தங்கையை இழக்கிறார். மனம் உடைந்த கலையரசன், வில்லன்கள் மீது தனது அம்பை பாய்ச்சுகிறார். முடிவு என்ன என்பதே படத்தின் மீதிக் கதை. சமூகத்தில் சமீபத்திய முக்கிய
பாகுபலி 2 – விமர்சனம்

பாகுபலி 2 – விமர்சனம்

Reviews
இந்திய சினிமா மட்டுமல்ல உலக சினிமாவும் வியந்து வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்த படம் தான் பாகுபலி 2. பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் எழுந்த கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார், தேவசேனா எப்படி கைது செய்யப்பட்டார் என பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கிறது. முதல் பாகத்தில் எடுக்கப்பட்ட ஒரு வேகம் இரண்டாம் பாகத்தில் எடுபட்டதா என பார்க்கலாம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக காலகேயனையும் அவனது கூட்டத்தையும் வதம் செய்த பிறகு பாகுபலி அரசனாக மூடி சூட்டுவதற்கு முன் தாய் சிவகாமியின் உத்தரவுக்கிணங்க நாட்டினை வலம் வருகிறார் பாகுபலி. அப்போது சிற்றரசு சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியாக வரும் அனுஷ்காவை (தேவசேனா) சந்தித்ததும் அவர் மீது காதல் வயப்படுகிறார். அனுஷ்காவும் பாகுபலி மீது காதல் கொள்கிறார். இந்த விஷயம் பாகுபலியின் அண்ணனாக வரும் பல்வாள்தேவனின் செவிகளுக்கு