கேயாருக்கு கோர்ட் தடை..

திரைப்பட சங்கத் தயாரிப்பாளர் தலைவராக கேயார் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கேயாரை எதிர்த்து போட்டியிட்ட தாணு, கடந்த 7ம் திகதி நடைபெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முறைகேடாக நடந்துள்ளது என்றும், எனவே, இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், கேயார் திரைப்படத் தயாரிப்பாளராக செயல்பட இடைக்காலத் தடை விதித்து இருப்பதோடு, இன்னும் ஒரு வார காலத்துக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேயாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.