தில்லுக்கு துட்டு – விமர்சனம்

maxresdefault (1)
வளர்ந்து வரும் நாயகன் யாராக இருந்தாலும் இப்போதைக்கு ஒரு பேய் படத்திலாவது நடித்து விட வேண்டும் இது தான் இன்றைய தமிழ் சினிமாவின் ட்ரெண்ட். அந்த வரிசையில் இன்று சந்தானம் நடிப்பில் வெளிவந்திருக்கும் “தில்லுக்கு துட்டு” படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

சிவன் கொண்டை மலை என்ற இடத்தில் வழக்கம் போல் ஒரு பாழடைந்த பங்களா… பேய்க் கதை என்றாலே அது இருக்கனுமே.. அந்த பங்களாவில் ஒரு அமானுஷ்ய பேய் இருக்கிறது. அதில் எப்படி பேய் வந்தது என்பதற்கு ஒரு ப்ளாஷ் பேக். அந்த ப்ளாஷ் பேக் அரசர் காலத்திற்கு சென்று வருகிறது.

சென்னையில் சாதாரண குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார் சந்தானம். இவருக்கு அப்பாவாக வருகிறார் ஆனந்தராஜ். மாமனாக வருகிறார் கருணாஸ். சேட்டு வீட்டு பெண்ணாக வருகிறார் ஷனாயா. ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள். வழக்கம் போல் ஏழை பையனுக்கு தன் மகளை கொடுக்க மாட்டேன் என கூறுகிறார் ஷனாயாவின் தந்தை. மகளும் மனம் மாறாமல் இருக்க, சந்தானத்தை கொல்ல ஒரு திட்டம் தீட்டுகிறார்.

இதற்காக மொட்டை ராஜேந்திரனை நாடுகிறார் சனாயாவின் தந்தை. சந்தானத்தை ப்ளான் செய்து கொல்வதற்காக அவரின் குடும்பங்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மொட்டை ராஜேந்திரனோடு அந்த பங்களாவிற்கு செல்கிறார் ஷனாயாவின் தந்தை. அதன் பின் அந்த பங்களாவில் என்ன நடந்தது..??? அந்த பேய் அவர்களை என்ன செய்தது..??? ஷனாயாவின் தந்தை திட்டம் பழித்ததா.?? அல்லது சந்தானமும் ஷனாயாவும் ஒன்று சேர்ந்தார்களா..?? என்பதே படத்தின் மீதிக் கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம் பாலா.

இதுவரை சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் இதில் சற்று அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். நடிப்பிலும், காமெடியிலும், டான்ஸ், பைட் என தனக்கு உரித்தான பாணியில் பட்டையை கிளப்பியிருக்கிறார் சந்தானம். குழந்தைகளின் கவரும் நாயகனாக மீண்டும் மிரட்டியிருக்கிறார்.

ஷனாயா அழகாக இருக்கிறார். தனது நடிப்பையும் செம்மையாக செய்திருக்கிறார். சந்தானத்தின் தந்தையாக வரும் ஆனந்த ராஜ், காமெடியில் புகுந்து விளையாடுகிறார். “என்னடா இது…. நான் சிரீயஸா பேசுனா கூட இப்போ ஏத்துக்க மாட்டேண்ட்றீங்க” என அவர் சொல்லும் காட்சிகளில் திரையரங்குகளில் சிரிப்பலைகளை அள்ள வைக்கிறார்.

பேய் படத்திற்கு என்றே செய்த முகம் போல் வந்திருக்கிறார் மொட்டை ராஜேந்திரன். இவர் நடித்தால் மட்டுமே பேய் படம் ஹிட் ஆகும் என்ற நிலை வந்துவிட்டது. இரண்டாம் பாதியில் இவர் அடிக்கும் லூட்டிகள் சூப்பர். டூப் பேய்க்கும் ஒரிஜினல் பேய்க்கும் இடையில் அனைவரும் மாட்டிக் கொள்ளும் காட்சிகள் அப்ளாஸ்.

கருணாஸூம் தன் பங்கிற்கு சிரிப்பூட்டுகிறார். பேய் படத்திற்கு உண்டான கதை தான், எல்லோரையும் மிரட்டி கொல்லும் பேய், இவர்களை மட்டும் பயமுறுத்தி விட்டு மட்டும் செல்வது சிறிது லாஜிக் மோதல். தமனின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.

தீபக் குமாரின் ஒளிப்பதிவில் அந்த பங்களா மிகவும் மிரட்டலாகவே தெரிகிறது. தேவையற்ற சில லாஜிக் இல்லா காட்சிகளை மட்டும் தவிர்த்திருக்கலாமே இயக்குனரே.

சரியான நடிகர்களை சரியான கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தது இயக்குனரின் பெரிய ப்ளஸ்.

தில்லுக்கு துட்டு – பாக்ஸ் ஆபீசில் பண மழை பொழியும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *