விவசாயிகளின் நலன் பேச்சு: தளபதிக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்!

இளைய தளபதி விஜய் எப்போதுமே தமிழ்நாட்டுகாக குரல் கொடுக்கும் தன்மை கொண்டவர். ஜல்லிக்கட்டு, காவேரி விவகாரம், பண நோட்டுகள் செல்லாது என அறிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் இருந்து அனைத்திற்கும் தமிழக மக்களுக்காக பல இடங்களில் குரல் எழுப்பியுள்ளார். அப்படித்தான் சமீபத்தில் விவசாயிகள் குறித்து ஒரு விருது விழாவில் பேசினார்.

அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது, அதுமட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் அதை வரவேற்றனர்.

இந்நிலையில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விஜய்யை மிகவும் பாராட்டியுள்ளார், இது மட்டுமல்லாது திரையுலகத்தில் இருக்கும் அனைவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் விவசாயிகள் பலரும் விஜய்க்கு தங்கள் பாராட்டை தெரிவிக்க, அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை தந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.