ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் – விமர்சனம்

நல்ல நடிகன் என்ற பெயரை எடுத்தும் தன்னால் கமர்ஷியல் ரீதியாக ஹிட் கொடுக்க முடியாமல் திணருகிறார் அதர்வா. அறிமுக இயக்குனர் ஓடம் இளவரசு இயக்கத்தில் அதர்வா நடிக்க உருவாகியிருக்கிறது ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’.

தன் முன்னாள் காதலிகள் மூவருக்கும் திருமண பத்திரிக்கை வைப்பதற்காக சென்னையிலிருந்து மதுரை செல்கிறார் அதர்வா. போன இடத்தில் சூரியுடன் நட்பு கிடைக்கிறது. சூரியிடம் தனது காதல் கதைகளை பகிர்கிறார்.

கல்லூரி காலங்களில் அதர்வா மன்மதன். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து அவர்களை கழட்டி விட்டு மீண்டும் ஒரு பெண்ணோடு காதல் வலையோடு சுற்றுகிறார். கடைசியாக அவர் யாரை திருமணம் செய்து கொள்கிறார். கடைசி நேரத்தில் என்ன என்ன ட்விஸ்ட் நடக்கிறது என்பதே படத்தின் கதை.

அதர்வா ஒரு கமர்ஷியல் நாயகனாக அதர்வா இதில் தனது வெற்றிக் கொடியை நிலை நிறுத்தியிருக்கிறார். ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டுமே இருந்தாலும் ப்ளே பாயாக விளையாடியிருக்கிறார். கடைசி 20 நிமிடத்தில் சூரியுடனான கலாட்டாவில் பின்னி எடுத்திருக்கிறார் அதர்வா.

ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி 4 பேருமே கலர்புல்லாக வந்து செல்கின்றனர். அவர்களுக்கான வேலைகளை செழிப்பாக செய்துள்ளனர்.

ஆரம்பத்தில் படத்தினை ஆமை வேகத்தில் எடுத்துச் செல்லும் இயக்குனர் பின் சுதாரித்து படத்தில் விறுவிறுப்பை ஏற்றியிருக்கிறார். மயில்சாமி ஒரு இடத்தில் அடிக்கும் காமெடி திரையரங்கமே அதிர்கிறது.

ஜாலியான ஒரு கமர்ஷியலை கொடுத்ததில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார். பாடல்கள் எடுபடவில்லை என்றாலும் பின்னனி இசையில் அசத்தியுள்ளார் இமான்.

படத்தின் முதல் பாதியில் ஏற்பட்ட ஒரு தொய்வு தான் படம் முழுக்க ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் – பாதியாக ஜெயித்திருக்கிறார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *