”தல.. ப்ரொமோஷனுக்கு காசு இல்ல…. பாத்து பண்ணி விடு தல…” ஹச் ராஜாவை ஓட்டிய பிரபல இயக்குனர்!

மெர்சல் படத்திற்கு வந்த பிரச்சனை அனைவரும் அறிந்த ஒன்று தான். படத்தை ஃப்ரீ ப்ரொமோஷன் எடுத்தது போல் படத்தை தமிழிசை செளந்தர்ராஜனும் ஹச் ராஜாவும் தொடர்ந்து விமர்சனம் செய்தார்கள்.

படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ’பலூன்’ திரைப்படம் விரைவில் வெளி வரவிருக்கிறது.

இப்படத்தின் இயக்குனர் சினிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் ஹச் ராஜாவை டேக் செய்து ட்விட் ஒன்று பதிவிட்டுள்ளார்.

அதில், பலூன்னு ஒரு படம் பண்ணி வெச்சிருக்கேன். ப்ரொமோஷனுக்கு காசு இல்ல… கொஞ்சம் பாத்து பண்ணி விடுங்க ராஜா சார்’ என கூறியுள்ளார்.

இதற்கு பலரும் ஹச் ராஜாவிற்கு எதிராகவும் சினிஷ்க்கு ஆதரவாக கமெண்டும் தட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *