கோவையில் பிரமாண்ட வால்வோ கார் திறப்பு விழா

வால்வோ கார் நிறுவனத்தின் பிரமாண்ட ஷோரூம் கோயமுத்தூரில் திறக்கப்பட்டுள்ளது. 23.11.2012 வெள்ளியன்று நடந்த இவ்விழா பற்றிய விவரம் வருமாறு.

உலகப் புகழ் பெற்ற வால்வோ கார் ஷோரூம்கள் இந்தியாவில் ஏற்கனவே ஏழு இடங்களில் உள்ளன. இந்தியாவில் எட்டாவதுதாகவும் தமிழ்நாட்டில் இரண்டாவதாகவும் கோவையில் திறக்கப்பட்டுள்ளது. இது தென்னிந்தியாவிலேயே பிரமாண்டமானதாகும்.

கோவை சின்னயம்பாளையத்தில் பார்க் பிளாசா,லீ மெரிடியன் ஓட்டல்கள் அருகே இது திறக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரி திரு.எம்.ரவி.ஐ.பி.எஸ். அவர்கள் ரிப்பன் வெட்டி ஷோரூமைத் திறந்து வைத்தார்.

வால்வோ நிறுவன சி.எப்.ஓ.திருமதி.சினேகா ஓபராய் குத்துவிளக்கேற்றினார். அவருடன் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து விளக்கேற்றினர்.

வால்வோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.தாமஸ் எர்னபெர்க் அனைவரையும் வரவேற்றார். அவர் தனது வரவேற்புரையில் ‘வால்வோ கார்கள் ஸ்வீடன் நாட்டிலிருந்து பாதுகாப்பான கார் என்று நிரூபணம் செய்யப்பட்டதாகும். 1920களில் முதல் தயாரிப்பை அறிமுகம் செய்தது. உலக நாடுகளில் புகழ்பெற்ற இது. இந்தியாவுக்கும் 2008ல் வந்தது.

வேகத்தைப் போல பாதுகாப்புக்கும் முக்கியமான முன்னுரிமை கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஷோரூம் தென்னிந்தியாவில் மிகப்பெரியதாகவும். இதை புதுமைகளையும் வசதிகளையும் வரவேற்கும் கோயம்புத்தூரில் திறப்பதில் பெருமைப்படுகிறோம்.

வால்வோ இப்போது நான்கு மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.S60,S80,XC60,XC90 என நான்கு மாடல்கள். ஒவ்வொன்றும் பாதுகாப்பிலும் வசதியிலும் தனித்தனி வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்காரும் ஸ்வீடனிலேயே வடிவமைத்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறன.உலகின் எந்த நாட்டுக்கு சென்றாலும் வால்வோ கார் அதே தரத்துடன் கிடைக்கும்.

வால்வோ கார்களில் சிட்டி சேப்டி சிஸ்டம் என்கிற பாதுகாப்பு அம்சம் உள்ளது. இது லேசர் தொழில்நுட்பம் இணைந்தது. உலகில் 70 சதவிகித விபத்துக்கள் 30.கி.மீ வேகத்திற்குக் கீழ் செல்லும் போது ஏற்படுவதாக புள்ளி விவரம் உள்ளது.

30 கி.மீ. வேகத்தில் செல்லும்போது எதிரே யாராவது வரும்போது பதற்றத்தில் பிரேக் தவறி ஆக்சிலேட்டரை மிதித்து விட்டாலோ இந்த லேசர் உதவியால் தானே பிரேக் சிஸ்டம் இயங்கி காரை நிறுத்தி விடும்.

அது மட்டுமல்ல வால்வோ களில் உள்ள கண்ணாடிகள் 360 டிகிரி லாமினேட் செய்யப்பட்டவை. பெரிய மோதல் நேர்ந்தாலும் பாதிக்காதவை. XC90 ரக கார்களில் போரான் ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது. இது இரும்பை விட 5 மடங்கு வலுவானது.

XC60 ரகக் கார்கள் இந்தியாவுக்கு 2011ல் அறிமுகம் ஆனது. இது மிகமிக பாதுகாப்பானது. 50 விருதுகள் பெற்றுள்ள மாடலாகும்.

பாதுகாப்புக்கு உத்திரவாதம் உள்ளதால் இதன் விலைபற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

வால்வோ கார் 33 லட்சத்திலிருந்து கிடைக்கின்றன என்று கூறினார். திரு.எம்.ரவி,ஐ.பி.எஸ் அவர்கள் பேசுகையில்.

‘வால்வோ உலகப் புகழ் பெற்ற கார். நியூசிலாந்து நாட்டில் 40 லட்சம் பேர் தான் இருக்கிறார்கள். அங்கு பெரும்பாலும் இந்தக் காரைத் தான் பயன்படுத்துகிறார்கள். காரணம் இது மிகவும் பாதுகாப்பானதாக இருப்பதுதான்.எனக்கும் இந்தக் காரை மிகவும் பிடிக்கும்.

கோவையில் இதன் ஷோரூமைத் திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நான் திறந்து வைத்த எதுவும் சோடை போனதில்லை. இதுவும் பெரிய வெற்றி பெறும். கோவையில் இதை ஆரம்பித்துள்ள சிவகணேஷ் துடிப்பானவர். பல இளைஞர்களுக்கு வழிகாட்டி வருபவர். அவர் முயற்சி பெரிய வெற்றி பெறும்’ என்று வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் வால்வோ நிறுவன விற்பனைப் பிரிவு இயக்குநர் ப்ரவீன் குமார். விற்பனை பிரிவின் அடுத்த நிலை இயக்குநர் ஷாஜி மேத்யூ, மார்க்கெட்டிங் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் சந்தீப் நாராயணன்.

கோவையில் உள்ள ‘வால்வோ ஆர்டிமிஸ் கார்ஸ்’ ஷோரூமின் நிர்வாக இயக்குநர் ஆர்.டி.சிவகணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருமதி புண்ணியா ஸ்ரீ நிவாஸின் வீணை இசைக் கச்சேரி நடைப்பெற்றது.

ஷோரூம் திறப்பு விழா நடைபெற்ற பிறகு மாடல் அழகிகள் புடைசூழ வால்வோ கார் அறிமுக ஊர்வலம் நடைபெற்றது. இதை பொதுமக்கள் ஆவலுடன் கண்டு ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *