பார்வையற்றோர்களின் கலங்கரை விளக்கமாக உருவெடுத்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி ..!!

Agarwal (5)
பார்வையற்றோர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக நடிகர் ஜெயம் ரவியும், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து அண்ணாநகரில் ‘100 பேருக்கான கண் பார்வை’ முகாமை நடத்தினர் . வெறும் பணமும், புகழும் சம்பாதிக்கும் நடிகராக மட்டும் இருந்துவிடாமல், சமூதாயத்தின் மீது அதீத அக்கறையும், அன்பும் கொண்டவராய் ஜெயம் ரவி செயல்பட்டிருப்பது, மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தனி மரியாதையை ஏற்படுத்தி இருக்கிறது.

“இந்த உலகிலேயே மிகவும் கொடுமையான ஒன்று பார்வை இல்லாதது தான். ஒருத்தருக்கு பார்வை வழங்குவது என்பது கடவுளோடு நேரடியாக பேசுவதற்கு சமம். இத்தகைய ஒரு புனிதமான சேவையில் என்னையும் பங்குபெற வைத்த டாக்டர் அகர்வாலுக்கு நன்றி. எங்களின் இந்த தொலைதூர பயணத்தில் நாங்கள் மட்டுமின்றி மக்களாகிய உங்களின் பங்களிப்பும் இருந்தால், விரைவில் நம் நாட்டில் உள்ள பார்வையற்றோர்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்கலாம். கரம் கொடுத்து அன்பு செய்வோம்!” என்கிறார் ஜெயம் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *