ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகும் ஜெயம் ரவியின் ‘போகன்’..!!

ஜெயம் ரவி, அரவிந்த சாமி மற்றும் ஹன்ஸிகா நடிப்பில் உருவாகியுள்ளது ‘போகன்’. படத்தினை இயக்கியுள்ளார் லக்‌ஷ்மண். பிரபுதேவா தனது சொந்த தயாரிப்பின் மூலம் இந்த படத்தினை தயாரித்துள்ளார். டி. இமான் இசையமைத்துள்ளார்.

படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் மக்களிடையே அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. படத்தினை வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.

ஆனால் தற்போது சூர்யாவின் ‘சி3’ திரைப்படம் பிப்ரவரி 9க்கு மாற்றப்பட்டுள்ளதை அடுத்து திட்டமிட்ட தேதிக்கு ஒருவாரம் முன்பே அதாவது பிப்ரவரி 2ஆம் தேதி வியாழக்கிழமை ‘போகன்’ ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜெயம் ரவி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *