பூஜை போட்டு துவங்கப்பட்ட ஜெயம் ரவியின் “போகன்”!!

Pogan (27)

நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த “ரோமியோ ஜூலியட்” படத்தின் வெற்றிக்கூட்டணி மீண்டும் கைகோர்த்திருக்கிறது.., இயக்குனர் லஷ்மண் இயக்க, ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடிக்கிறார். இந்த கூட்டணியோடு தனி ஒருவன் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்த அரவிந்தசாமியும் கைகோர்க்கிறார்.

சென்னையை அடுத்துள்ள பின்னி மில்லில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது.. இமானின் இசையில் உருவாகும் இப்படத்தின் “டமால் டுமீல்” என்ற பாடல் காட்சியை இன்று படமாக்க இருக்கிறார்கள். நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் நடன அமைப்பில் இந்த பாடல் உருவாகிறது..

விழாவில் வேல்ஸ் யுனிவர்சிட்டி டாக்டர். ஐசரி கணேஷ், ஒளிப்பதிவாளர் செளந்திரராஜன், கலை இயக்குனர் மிலன், விக்கி, அஸ்வின், மற்றும் தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகியோர் பங்கேற்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *