தமிழ் சினிமாவில் தான் நடிப்பேன் – ஜிமிக்கி கம்மல் புகழ் ஷர்லின்!

சில தினங்களுக்கு முன்னாள் இணையத்தில் வெளியான ‘ஜிமிக்கி கம்மல்’ என்ற பாடல் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கொச்சியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் கமார்ஸ் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அந்த பாடலுக்கு நடனமாடியிருந்தார். அந்த நடனத்தில் ஷர்லின் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். அக்கல்லூரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் கல்லூரிப் பேராசிரியராக சேர்ந்துள்ளார்.

இந்த வீடியோ புகழ் அடைந்தது குறித்து ஷர்லின் பேசும் போது, “இதனை நான் எதிர்பார்க்கவில்லை. நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் சினிமாவில் நடிக்கத் தயார் தான். ஆனால் வீட்டில் ஒப்புக் கொள்வார்களா என்று தெரியவில்லை. தற்போதைக்கு எதுவும் முடிவு செய்யவில்லை. தமிழில் எனக்குப் பிடித்த நடிகர் அஜித் தான்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.