விஜய் நல்ல படங்களில் நடிக்கட்டும்…. கமல் அட்வைஸ்!

தமிழக அரசியலில் களமிறங்க நடிகர் கமல் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஆயத்த பணிகளில் தற்போது கமல் ஈடுபட்டுள்ளார். கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை தேர்வு செய்யும் வேலைகளில் கமல் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தனக்கான அரசியல் விளக்கத்தை அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் கமல் நேரடியாக அளித்து விட்டார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு போட்டியாக இருப்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கமல்ஹாசன், அவர் என்ன திட்டத்தோடு வருகிறார், எந்த மாதிரி மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறார், நாங்கள் நினைக்கும் எதிர்காலத்துக்கு இடையூறாக இருந்தால் அதற்காக விமர்சனம் வைக்கப்படும். நாங்கள் செய்யும் விஷயங்களை செய்பவராக இருந்தால் ஆதரவு தெரிவிப்போம் என தெரிவித்தார். மேலும் இந்தி நடிகர் ஆமிர்கான் மாதிரி தம்பி விஜய் நல்ல படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *