ஆர் பி செளத்ரி, ஏ எம் ரத்னம் வரிசையில் ஆர் டி ராஜாவை பார்க்கிறேன் – கே எஸ் ரவிக்குமார்..!!

k-s-ravikumar

கடந்த வெள்ளியன்று மிகவும் பிரம்மாண்டமாக பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்தது ‘ரெமோ’. பல எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் தற்போது திரையரங்குகளி வெற்றிநடை போட்டு வருகிறது.

இப்படத்திற்காக உழைத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் டெக்னீசியன்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னை ஒரு பிரபல தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது,

“ஒரு திரைப்படத்திற்கு நன்றி விழா என்பதை நான் இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன்… சினிமா மீது அளவு கடந்த அன்பும், சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்து கொள்ளும் குணம் கொண்ட மனிதர்களால் தான் இத்தகைய செயல்களை செய்ய முடியும்…. அப்படி நான் பார்த்த தயாரிப்பாளர்களுள் ஆர் பி சொளத்ரி சாரும், ஏ எம் ரத்னம் சாரும் சிலர்….

அப்படி ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் ஆர் டி ராஜாவை பார்க்கிறேன்….ரெமோ படத்தின் உண்மையான வெற்றிக்கு சான்றாக திகழ்பவர்கள் விநியோகஸ்தர்கள்….அவர்களை மேடையேற்றி, தன்னுடைய நன்றிகளை தெரிவித்த தயாரிப்பாளர் ஆர் டி ராஜாவிற்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்….” என்று உற்சாகமாக கூறினார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *