மெர்சல் படத்தின் அதீத சாதனை….. காத்திருக்கும் ரசிகர்கள்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் வெளியாகுமா ஆகாதா என பலர் காத்திருக்க, ரசிகர்கள் படம் நிச்சயம் வெளிவரும் என தங்கள் பணிகளை மிகவும் மும்முரமாக செய்து வருகின்றனர்.

கட் அவுட், டிஜிட்டல் பேனர்கள் என திரையரங்கை மறைக்கும் அளவிற்கு தமிழகத்தின் அநேக திரையரங்குகள் தற்போது விஜய் ரசிகர்களின் வசம் தான் என்று கூறினால் அது மிகையாகாது.

சுமார் 140 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தினை ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வசூலில் நிச்சயம் இப்படம் புது சாதனை படைக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

விஜய் என்ற ஒரு நடிகனுக்கு மட்டுமே படத்தின் வியாபாரம் தூள் தூளாகி விடும்.

படத்தினை தேணாண்டாள் நிறுவனமே தமிழ்நாடு முழுவதும் வெளியிட போகிறது.

செலவுக்கு ஏற்ப மெர்சல் படத்தை வியாபாரம் செய்ய முடியாது என்பதால் தயாரிப்பு தரப்பு தமிழ்நாடு முழுவதும் வினியோக முறையில் மெர்சல் வியாபாரத்தை
தொடங்கியுள்ளனர்.

சென்னை நகர விநியோக உரிமையை அபிராமி மெஹாமால் 10 கோடி ரூபாய் டெபாசிட்டாக கொடுத்து வாங்கியுள்ளனர். சுமார் 22 கோடி ரூபாய் மொத்த வசூலானால் பத்து கோடி ரூபாய் அசல் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published.