விக்ரம் வேதா வரிசையில் வெற்றியை தொட வரும் ‘ரிச்சி’

நிலையாக ,உறுதியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் படம், நிவின் பாலி, ‘நட்டி’ நட்ராஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ் ராஜ், ராஜ் பரத் மற்றும் லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி நடிப்பில், கவுதம் ராமசந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ரிச்சி’. இது நிவின் பாலியின் முதல் நேரடி தமிழ் படமாகும். இப்படம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. ‘விக்ரம் வேதா’, ‘அவள்’, ‘அறம்’ போன்ற அசத்தலான படங்களை பெரிய அளவில் ரிலீஸ் செய்து மாபெரும் வெற்றி கண்ட ‘Trident Arts’ ரவீந்திரன் ‘ரிச்சி’ படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்கிறார்.

‘ரிச்சி’ குறித்து இப்படத்தின் இயக்குனர் கவுதம் ராமசந்திரன் பேசுகையில், ” நிவின் பாலியுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம். தமிழ் சினிமா ரசிகர்களிடையே அவருக்கு இருக்கும் வரவேற்பு இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. தன் சொந்த குரலிலேயே டப்பிங் செய்து, கதைக்கு தேவையான சரியான தோற்றத்தையும் அழகாக கொண்டுவந்தது நிவினின் அர்பணிப்புக்கு சான்றாகும்.

யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவதில் கில்லாடி நட்டி சார். இப்படத்தில் அவரது நடிப்பு நிச்சயம் பேசப்படும். நிவின் மற்றும் நட்டி அவர்களின் கூட்டணி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.

கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு அற்புதமான நடிகை. எந்த ஒரு விஷயத்தையும் விரைவாக கற்றுக்கொள்பவர் அவர். அவரது அர்ப்பணிப்பை கண்டு நாங்கள் வியந்துள்ளோம். டாப் கதாநாயகிகளில் ஒருவராக ஷ்ரத்தா நிச்சயம் கூடிய விரைவில் வலம்வருவார்.

அஜனீஷ் லோக்நாத் தனது சிறப்பான இசையின் மூலம் இப்படத்திற்கு மேலும் உயிரூட்டியுள்ளார். இப்படத்திற்கான அவரது பாடல்களும் இசையும் இதுவரை வந்துள்ள சிறந்த இசைகளோடு ஒப்பிடும் வகையில் அமைந்துள்ளன.

‘ரிச்சி’ படத்தின் கதை மற்றும் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும். ஒரு சுவாரஸ்யமான படத்திற்கு தேவையான எல்லா எமோஷன்களையும், கமெர்ஷியல் விஷயங்களையும் இப்படத்தில் சரியான கலவையில் தந்துள்ளோம். இப்படத்தில் பணியாற்றிய மற்ற நடிகர்களும், எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தை தங்கள் சொந்த படமாக கருதி , கூடுதல் உழைப்பு போட்டு மேலும் மெருகேத்தியுள்ளனர்.

‘Trident Arts’ ரவீந்திரன் அவர்கள் எங்கள் படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்வது இளம் அணியான எங்களுக்கு மிகவும் பெருமையை தந்துள்ளது . அவரது பிரம்மாண்ட விளம்பர யுக்திகள் அவருக்கு தொடர் வெற்றிகளை தந்துவருகின்றது. எங்கள் அணியின் உழைப்பை தமிழ் சினிமா ரசிகர்கள் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் கண்டு ரசிக்கலாம்”

இப்படத்தை ‘Cast N Crew’ நிறுவனம் சார்பில் ஆனந்த் குமார் மற்றும் வினோத் ஷோர்னுர் தயாரித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையில், பாண்டி குமார் ஒளிப்பதிவில் ‘ரிச்சி’ உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *