பிக்-பாஸ் வீட்டில் இரவில் ஓவியா நடத்திய அட்டூழியம்…

சுமார் 100 நாட்கள் பிக்-பாஸ் நிகழ்ச்சியின் மீது ரசிகர்கள் கொண்டிருந்த ஆர்வம் மிகவும் அதிகம். பிக்-பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்கள் போட்டுக் கொண்ட சண்டைகளை காண மக்களின் ஆர்வம் அதிகமாக இருந்தது,.

இந்நிகழ்ச்சியில் காட்டப்படாத காட்டாத பல விஷயங்களை காட்டினால் என்ன செய்வார்களோ!, என்று நிகழ்ச்சி நடத்தியவர்களே மக்களின் தீவிரம் குறித்து விவாதித்து வருகிறார்களாம்.

டிவி யில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் பார்த்தது சும்மா டிரைலர் போல தான். ஆனால், எடிட் செய்யப்பட்ட காட்சிகள் படு ரனகளமாக இருக்குமாம். அதிலும், அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்துள்ள ஓவியாவின் ரகசியங்கள், ப்பா…..,என்று சொல்ல வைக்கும் என்கிறார்கள்.

சிகரெட் புகைக்கும் அறையில் ஆரவுடன் முத்த சண்டை நடத்திய ஓவியா, இரவு நேரத்தில் அனைத்து விளக்குகளும் அனைத்த பிறகு அனுயாவை தொந்தரவு செய்ய தொடங்கிவிடுவாராம்.

இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய நடிகை அனுயா, “பிக் பாஸ் நிகழ்ச்சி என்னை யார்? என்று எனக்கே காட்டியது. அங்கு இருந்தவரை நான் யாரிடமும் சண்டைபோடவில்லை. இருந்தாலும் எனது பேவரைட் ஓவியா தான்.

இரவில் அனைத்து விளக்குகளும் அனைந்தவுடன் நான் தனியாக பாட்டு பாடிக்கொண்டிருப்பேன், இதை கேட்ட ஓவியா, என்னை பாட சொல்லி ரசிப்பார். பிறகு அதுவே அவருக்கு வாடிக்கையாவிட்டது. தினமும், விளக்கு அனைந்ததும் என்னிடம் வந்து பாட சொல்லுவார்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *