உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகிய ‘பள்ளி பருவத்திலே’…

பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக நடிக்க , நாயகியாக வென்பா நடிக்க உருவாகியுள்ளது ‘பள்ளி பருவத்திலே’. இவர்களுடன் கே.எஸ்.ரவி குமார், ஊர்வசி, தம்பிராமய்யா, கஞ்சாகருப்பு, ஜி.கே.ரெட்டி, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தினை பற்றி இயக்குனர் கூறும்போது, ‘நிஜ சம்பவங்களின் தொகுப்பே கதையாக உருவாக்கப் பட்டுள்ளது. தஞ்சையில் உள்ள ஆம்பளாபட்டு என்ற கிராமத்தில் நான் படித்த பள்ளிக் கூடத்தில் நடந்த சம்பவங்கள் சுவாரஸ்ய மானது. இங்கு படித்த பலர் உயர்ந்த நிலையில் இருக் கிறார்கள். இதற்கு காரணமான ஆசிரியர் சாரங்கன் கதாப்பாத்திரத்தை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றிருக்கிறார். ஊர்வசி பாத்திரமும் பேசப்படும்.

இன்றைய காலகட்டத்தில் அழிந்து வரும் விவ்சாயத்தை காக்கும் பொருட்டு தஞ்சையில் படப்பிடிப்பை முழுவதும் நடத்தினோம். பள்ளி பருவத்திலே முழுவதும் கிராமத்து காமெடி படமாக உருவாகியுள்ளது.’ என்றார்.

ஒளிப்பதிவு- வினோத்குமார், இசை-விஜய் நாராயணன், பாடல்கள் – வைரமுத்து, வாசுகோகிலா, எம்.ஜி. சாரதா, கலை- ஜான்பிரிட்டோ,எடிட்டிங்-சுரஷ்அர்ஷ், நடனம்- தினா, ஸ்டண்ட் -சுப்ரீம்சுந்தர், தயாரிப்பு- டி.வேலு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் வாசுதேவ் பாஸ்கர்.

படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.