பீச்சாங்கை – விமர்சனம்

 

Rating 2.75/5 

தமிழ் சினிமாவில் புது இயக்குனர்களின் வரவு அதிகம் என்றாலும் குறும்படங்களில் தங்களது திறமையை வெளிக்கொணர்ந்த பிறகு தான் பெரிய திரைக்கான வாய்ப்பு எட்டுகிறது. அப்படி, குறும்படங்களில் தனது திறமையை காட்டிய இயக்குனர் அசோக் இயக்கிய படம் தான் இந்த ‘பீச்சாங்கை’.

நாயகன் கார்த்திக் ஒரு பிக் பாக்கெட். தனது பீச்சாங்கையால் அனைவரது பணத்தையும் ஈஸியாக பிக் பாக்கெட் அடித்து விடுவார். நாயகியாக வரும் அஞ்சலி ராவ்வை பார்க்கும் தருணத்தில் அவர் மீது காதல் வயப்படுகிறார் கார்த்திக்.

அஞ்சலி ராவ்வும் கார்த்திக் மேல் காதல் வயப்படுகிறார். சில நாட்களில் கார்த்திக் யார் என்பது அஞ்சலி ராவ்விற்கு தெரிய வர, கார்த்திக்கை போலீஸில் சிக்க வைக்கிறார் அஞ்சலி. போலீஸிடம் இருந்து தப்பித்து ஓடும் கார்த்திக் ஒரு விபத்தில் சிக்குகிறார். இந்த விபத்தில் அவரது வலது மூளையில் காயம் ஏற்பட்டு இவரது பீச்சாங்கை இவரது மூளைக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறது. அந்த பீச்சாங்கையால் கார்த்திக்கிற்கு ஏற்படும் நன்மை, தீமை இதுவே படத்தின் மீதிக் கதை.

நாயகன் கார்த்திக் தமிழ் சினிமாவிற்கு ஒரு வரவு. அந்த பீச்சாங்கையால் அவர் படும் அவதிகள், அது படுத்தும் சேட்டைகள் என நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார். ரொமான்ஸ் காட்சிகளில் கொஞ்சம் அதிகமாகவே தட்டு தடுமாறியிருக்கிறார். நாயகி அஞ்சலி ராவ் கண்களால் வசியம் செய்கிறார்.

ஒரு ரவுடி கும்பல் பணத்திற்காக குழந்தையை கடத்துகிறது. முதலில் பயங்கரமான ரவுடியாக காண்பித்து அவ்வப்போது காமெடியாக்குவது ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அனுபவமிக்க நடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு இன்னும் அதிகமான காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

படத்தின் மிகப்பெரிய பலம் என்று பார்த்தால் கடைசி அரை மணி நேரம் நடக்கும் லூட்டி காட்சிகள் மட்டும் தான். படத்தின் திரைக்கதையை இன்னும் பலப்படுத்தியிருக்கலாம்.

பீச்சாங்கையால் ஏற்படும் பிரச்சனைகள் என்ற கதை சினிமாவில் புதுசு – கவர்கிறது.

கெளதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு யதார்த்தை கொண்டு வருகிறது.

பால முரளி இசையில் பாடல்கள் ஜொலிக்கவில்லை என்றாலும், பின்னனி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

பீச்சாங்கை – ஒருமுறை ‘கை’ பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *